கோமாளி படத்தில் விஜய் பற்றிய வசனம் ஏன்? - ஷாரா பதில்!

news18
Updated: September 9, 2019, 3:05 PM IST
கோமாளி படத்தில் விஜய் பற்றிய வசனம் ஏன்? - ஷாரா பதில்!
ஜெயம் ரவி | விஜய்
news18
Updated: September 9, 2019, 3:05 PM IST
கோமாளி படத்தில் விஜய் ரசிகர்கள் பற்றிய வசனம் இடம்பெற்றது ஏன் என்ற கேள்விக்கு அந்தப் படத்தில் நடித்த ஷாரா பதிலளித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஷாரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக பேசியுள்ள கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன.

அதேவேளையில் கோமாளி படத்தில் தளபதி ஃபேன் பொய்ய சொல்லமாட்டான் என்ற வசனத்தைப் பேசி நடித்திருப்பார் ஷாரா.

Loading...

விஜய் ரசிகர்களை புகழ்ந்து பேசியதற்கான காரணம் குறித்து இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், நான் உண்மையிலேயே விஜய் ரசிகர் தான். அந்தக் காட்சியின் போது படக்குழு எனக்கு டி-சர்ட் கொடுத்தது. அதில் விஜய் ஃபோட்டோ இருந்தது. அதைப் பார்த்தவுடன் அந்த வசனம் தோன்றியது” என்றார்.

வீடியோ பார்க்க: இருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...