‘சந்தனத் தேவன்’ படம் என்ன ஆனது? - பட விழாவில் போட்டுடைத்த அமீர்

‘சந்தனத் தேவன்’ படம் என்ன ஆனது? - பட விழாவில் போட்டுடைத்த அமீர்
அமீர்
  • Share this:
சந்தனத் தேவன் படத்தை கைவிட்டதற்கான காரணத்தை இயக்குநர் அமீர் படவிழா ஒன்றில் கூறியுள்ளார்.

ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. இந்தப் படத்தில் நடிகர் அபி சரவணன் அப்புகுட்டி மற்றும் நாயகி வெண்பா ஆகியோர் நடித்து உள்ளனர்.

ராஜா பவதாரணி இசையமைத்துள்ள ‘மாயநதி’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசைத் தட்டை வெளியிட்டனர்.


பின்னர் பேசிய இயக்குநர் அமீர், “உலக வராலாற்றிலேயே இப்படி ஒரு இசைக்குடும்பம் (இளையராஜா) இருந்ததில்லை. அந்த அளவிற்கு சினிமாவில் பல்வேறு துறைகளில் உள்ளனர். இப்படி ஒரு குடும்பம் கிடைத்தது தமிழ் சினிமா செய்த பாக்கியம். சினிமாவில் எல்லா சங்கங்களும் மூடு விழா நடத்தக்கூடிய நிலையில் தான் உள்ளன.



ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். ஆனால் அதற்காக ஃபேஸ்புக், டிவிட்டரில் நாம் ஒரு கருத்தைச் சொல்லி அதற்காக வரும் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது. சினிமாவில் வெற்றி தான் முக்கியம்.என்னுடைய சந்தன தேவன் படம் ஆரம்பித்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தன. அந்தப் படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர். ஆனால் கடந்த 3 வருடமாக அந்தப் படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பணம் கொடுக்கும் ஃபைனான்சியர்கள் பொது மேடையில் பேசக் கூடாது. மத்திய மாநில அரசுகள் குறித்து விமர்சனம் செய்யாமல் இருந்தால் பணம் தருவதாக நிபந்தனை வைத்தார். அதனால் தான் அந்தப் படத்தை நிறுத்தி வைத்தேன்.

கலைஞர் இருக்கும் போது தமிழ் சினிமா குறித்த பிரச்னைகளை கேட்டு கொண்டு இருந்தார். திமுக ஆட்சியில் தான் ஃபிலிம் சிட்டி உருவாக்கப்பட்டது. அதற்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர்தான் அப்போது வைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பெயரை ஜெ.ஜெ. ஃபிலிம் சிட்டி என மாற்றினார். இது மிகப்பெரிய தவறு.



தற்போது உள்ள முதல்வர் எந்த பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறார் அதனால் அவர் யாருக்கும் பயப்பட மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை உங்களை கேள்வி கேட்டு கொண்டு இருந்த நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீண்ட நாளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசு விருதுகளை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தான் தமிழ் சினிமா இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. யாரும் துறை சார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் போய் சொன்னதே இல்லை. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அவரவர் தேவையை நிறைவேற்றிக் கொண்டு முன்னேறுகிறார்கள். தவிர துறை சார்ந்த பிரச்னைகளை பற்றியே முதல்வர்களிடம் கொண்டு பேசியதே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை நாஞ்சில் நளினி மரணம்!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading