பாலிவுட் படத்துக்காக ‘விஜய் 64’ வாய்ப்பை மறுத்த நடிகை!

news18
Updated: September 4, 2019, 8:52 PM IST
பாலிவுட் படத்துக்காக ‘விஜய் 64’ வாய்ப்பை மறுத்த நடிகை!
விஜய்
news18
Updated: September 4, 2019, 8:52 PM IST
‘விஜய் 64’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் விஜய்யின் 64-வது படமாக உருவாகிறது.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் அவருக்கு ஷாஹித் கபூருடன் ஜெர்ஸி பட இந்தி ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் தளபதி 64 படத்தை மறுத்ததாக கூறப்படுகிறது.இருப்பினும் விஜய் பட வாய்ப்பை தவற விட்டது தனக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ராஷ்மிகா கூறி வருகிறாராம்.

Loading...இதையடுத்து தளபதி 64 படத்தில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை அணுகியுள்ளது படக்குழு. அவர் இந்தப் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருப்ப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...