விஜய்யிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி? - காயத்ரி ரகுராம்!

விஜய்யிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி? - காயத்ரி ரகுராம்!
காயத்ரி ரகுராம்
  • News18
  • Last Updated: October 26, 2019, 6:36 PM IST
  • Share this:
பாஜக ஆதரிக்கும் கட்சியை விஜய் விமர்சிக்கிறார். ஆனால் அவரை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலை என்ற நெட்டிசனின் கேள்விக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார்.

ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் நேற்று வெளியானது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தின் முதல்நாள் முதல்காட்சியைப் பார்த்துவிட்டு சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் நடிகை காயத்ரி ரகுராம் பிகில் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர், பாஜக ஆதரிக்கும் கட்சியை விஜய் விமர்சிக்கிறார். ஆனால் அவரை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலை? என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த நடிகை காயத்ரி ரகுராம், டிவி காமெடி நிகழ்ச்சி, அரசியல் தலைவர்களின் பேச்சு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நிறைய விமர்சனங்கள் உள்ளன. விமர்சனங்கள் தவறல்ல. ஆனால் ஏன் நடிகர் விஜய்யிடம் மட்டும் கேள்வி கேட்கிறீர்கள். அவர் நடிப்பில் தனது பங்கை அளித்துள்ளார். அதில் தவறே இல்லை. பொழுதுபோக்கை பொழுதுபோக்காக பாருங்கள். தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

படிக்க: விஜய்யின் பிகில்... முதல் நாள் வசூல் ரிப்போர்ட்...!

வீடியோ பார்க்க: பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

First published: October 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading