ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மம்முட்டியுடன் இதுவரை இணைந்து நடிக்காதது ஏன்? கமல் பதில்

மம்முட்டியுடன் இதுவரை இணைந்து நடிக்காதது ஏன்? கமல் பதில்

மம்மூட்டி - கமல்

மம்மூட்டி - கமல்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசிலுக்கு விக்ரம் படத்தில் முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இதுவரை இணைந்து நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார் கமல்.

கமலும், மம்முட்டியும் சினிமாவில் பல ஆண்டுகாலம் இருந்தாலும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. ரஜினிகாந்த் மம்முட்டியுடன் இணைந்து தளபதி படத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் 1991-ல் வெளியான இந்த திரைப்படம் மெகா ஹிட்டானது.

இதேபோன்று 2009-ல் வெளியான உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் கமலும், மலையாள மெகா ஸ்டார் மோகன் லாலும் இணைந்து நடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க - உலகின் மிக உயரமான ஸ்க்ரீனில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்… புரொமோஷனில் புதிய உச்சம்

இந்நிலையில் விக்ரம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியையொட்டி கேரளாவுக்கு சென்ற கமல், மம்முட்டியுடன் நடிப்பதற்கு விரும்புவதாக கூறினார். அவரிடம் செய்தியாளர்கள், இதுவரை ஏன் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல் அளித்த பதிலில், ‘நானும் மம்முட்டியும் பலமுறை பல கதைகளை விவாதித்துள்ளோம். எனக்கு ஓரளவு திருப்தியாகப்படும் கதை, மம்முட்டிக்கு பிடிக்காமல் போய்விடும். அவர் நல்ல கதை அமையட்டும் என்று கூறுவார்.

இப்போது விக்ரம் படம் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் இருவரும் இணைந்து நடிக்க மம்முட்டி சம்மதிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதையும் படிங்க - 40 வயதிலும் செம்ம ஹாட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின்!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசிலுக்கு முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் விக்ரம் படத்திற்கு கேரளாவில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கிடையே துபாயின் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில், விக்ரம் படத்துடைய ட்ரெய்லர் நாளை இரவு 8.10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

First published: