சூர்யாவுக்கு ஆதரவா யாரும் இல்லையா- ரஜினி, விஜய், அஜித் எங்கே? இயக்குநர் அமீர் கேள்வி!

இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் அளவில் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை என்று இயக்குநர் அமீர் பேசினார்.

இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் அளவில் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை என்று இயக்குநர் அமீர் பேசினார்.

  • Share this:
ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒளிப்பதிவு திருத்த சட்டம் குறித்து ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வருவதற்கு வரைவை முன்வைத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் இருந்து திரைத்துறை கலைஞர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனு ராமசாமி உள்ளிட்டவர்கள் தங்களுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்திருக்கிறார்கள். நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் முக்கிய இயக்குனர்கள் இன்று மாலை இணையவழியில் இணைந்து ஒளிப்பதிவு சட்ட வரைவு குறித்த விவாதம் நடத்தினார்கள். அப்போது பேசிய இயக்குநர் அமீர், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் அளவில் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை என்று பேசினார்.

இதையும் படிங்க: ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா - திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்...


இந்த சட்டத்திருத்தம் அவர்களையும் சேர்த்து தான் பாதிக்க இருப்பதாக  கூறிய அமீர்,  இதற்கு எதிராக சூர்யா கருத்து தெரிவித்து அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்த போது கூட சூர்யாவுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


அனைத்து வாரியங்களையும் அரசே ஏற்று நடத்தினால் இது அதிபர் ஆட்சி போல ஆகிவிடும் என்று பேசிய இயக்குநர் அமீர், சென்சார் போர்டு மாதிரியானவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

பின்னர், ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக பேசிய இயக்குநர் பாரதிராஜா, கருத்து சரியா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் இந்த சட்டத் திருத்தத்தை தடுத்து நிறுத்த மிகப்பெரிய போராட்டம் தேவை என்றும் பேசினார்.

 
Published by:Murugesh M
First published: