• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Asuran GV Prakash: ’அசுரன்’ இசையை விட ‘விஸ்வாசம்’ சிறப்பா? நெட்டிசன்கள் கேள்வி

Asuran GV Prakash: ’அசுரன்’ இசையை விட ‘விஸ்வாசம்’ சிறப்பா? நெட்டிசன்கள் கேள்வி

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

GV Prakash: ’அசுரன்’ படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் தீம் மியூசிக்கான ’வா அசுர வா’ என்ற பாடல், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

  • Share this:
    ’அசுரன்’ படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது தராமல், ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி.இமானுக்கு கொடுத்ததை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ’அசுரன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





    அதோடு ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு, சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருதும், ’ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறப்பு ஜூரி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ’விஸ்வாசம்’ படத்தின் பாடல்களுக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக, டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ’அசுரன்’ படத்தில் சிறப்பான பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கிய ஜி.வி.பிரகாஷுக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை? ’அசுரன்’ பட இசையை விட ’விஸ்வாசம்’ படத்தின் இசை சிறப்பானதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



    ’அசுரன்’ படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் தீம் மியூசிக்கான ’வா அசுர வா’ என்ற பாடல், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த படத்துக்கு நிச்சயம் ஜி.வி பிரகாஷ் தேசிய விருது பெறுவார் என அப்போதிலிருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அவருக்கு கிடைக்காதது, ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை ஜி.வி.பிரகாஷ் பேசி வருவதால், அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



    இதற்கிடையே இன்று காலை நடந்த ’தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, ’அசுரன்’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது தனக்கு வருத்தமளிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: