ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: சோழர்களை பழிவாங்கும் நந்தினி... ஏன் தெரியுமா?

Ponniyin Selvan: சோழர்களை பழிவாங்கும் நந்தினி... ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

தன் காதலனை கொன்றதனால், ஆதித்தனை பழிவாங்க திட்டமிட்டாள் நந்தினி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாவதைத் தொடர்ந்து, படத்தில் நந்தினியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பேன் இந்தியன் படமாக நாளை வெளியாகிறது. பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  இந்தப் படத்தை பார்க்க புத்தகம் வாசித்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைத்து ரசிகர்களுமே ஆவலுடன் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தைப் பொறுத்தவரை நந்தினி ஏன் சோழர்களை பழிவாங்கத் துடிக்கிறாள்? என நாவலை வாசிக்காத பலர் மனதிலும் கேள்வி எழுந்திருக்கும்.

  பாண்டிய நாட்டில் வசித்து வந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தந்தைக்கு ஒரு நாள் நந்தவனத்தில் பெண் குழந்தை ஒன்று கிடைக்கிறது. குழந்தையை எடுத்து வந்து அன்போடு வளர்க்கிறார்கள் நம்பியின் குடும்பத்தினர். நந்தவனத்தில் கிடைத்ததால் அவளுக்கு நந்தினி எனப் பெயர்சூட்டி வளர்க்கின்றனர். ஆழ்வார்க்கடியான் அவளை தன் உடன் பிறந்த தங்கையாகவே பாவித்து பாசத்தோடு வளர்த்தான். தந்தை இறந்த பிறகு, தங்கையை வளர்க்கும் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டான் நம்பி. வைஷ்ணவன் ஆதலால் நம்பியுடன் இருக்கும் நந்தினிக்கும் பெருமாளின் மீது பக்தி அதிகரித்தது. நந்தினியும் கிட்ட தட்ட இன்னொரு ஆண்டாளாகவே மாறியிருந்தாள்.

  சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கு சேவூர் போர் நடந்தது. இந்த போரில் பாண்டியர்களை சர்வ நாசம் செய்தது சோழர் படை. ஆனால், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மட்டும் உயிர் தப்பித்தான். சோழர்களிடம் சிக்காமல் மறைந்து வாழ்ந்து வந்தான். அவன் தஞ்சம் புகுந்திருந்தது நந்தினியிடத்தில். ஆனால் பாண்டியனை தேடி வந்த ஆதித்த கரிகாலன் அவள் கண் முன்னே அவன் தலையை வெட்டுகிறான்.

  ஆதித்த கரிகாலன் பாண்டியனை கொன்ற பிறகு, நந்தினி பழுவேட்டரையரை மணந்தாள். காரணம், வீரபாண்டியன் நந்தினியை மணப்பதாக வாக்களித்திருந்தான், நந்தினியும் வீரபாண்டியன் மீது காதல் கொண்டிருந்தாள். தன் காதலனை கொன்றதனால், ஆதித்தனை பழிவாங்க திட்டமிட்டாள். போர் முடிந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த பழுவேட்டரையரை, தன் வலையில் விழ வைத்தாள் நந்தினி.

  பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்யவில்லை - கலைப்புலி எஸ்.தாணு

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நந்தினி சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பழிவாங்க துடிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சிறு வயதில் நம்பியின் குடும்பம் பழையாறை வசித்து வந்தது. அங்கு முதன் முதலில் இளவரசர் கரிகாலரையும், இளவரசி குந்தவையையும் சந்திக்கிறாள் நந்தினி. நந்தினியின் அழகை கண்டு பொறாமைக் கொள்கிறாள் குந்தவை. இளவரசிக்கு கிடைக்கும் செல்வாக்கைக் கொண்டு பொறாமைக் கொள்கிறாள் நந்தினி. இப்படி சிறு வயதிலேயே இருவருக்கும் இடையில் பகை ஆட்கொள்ள, ஆதித்த கரிகாலன் நந்தினியின் மீது காதல் வயப்பட்டுள்ளதை அறிகிறாள் குந்தவை. உடனடியாக நம்பியின் குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றுகிறாள். இவையெல்லாம் சேர்ந்து மிகப்பெரிய பழிவாங்கும் குணத்தை நந்தினிக்கு கொடுக்கிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Aishwarya Rai, Ponniyin selvan