ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கவுதம் கார்த்தியுடன் விரைவில் திருமணம்.... இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டெலிட் செய்த மஞ்சிமா மோகன்

கவுதம் கார்த்தியுடன் விரைவில் திருமணம்.... இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டெலிட் செய்த மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன்

கவுதம் கார்த்தி- மஞ்சிமா மோகம் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் மஞ்சிமா மோகனுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் FIR திரைப்படத்திலும் நடித்தார் மஞ்சிமா. சமீபத்தில் மஞ்சிமா மோகன் அவருடய அனைத்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டார்.

  தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை நீக்கியது குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்குப் பதிலளித்த மஞ்சிமா மோகன், "இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைவதற்கு ஒரு சிறந்த இடம் என்பதை உணர்ந்தேன், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அழகை பற்றி கவலைப்பட வேண்டாம்! அதனால் எனது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் படங்களை archive செய்துவிட்டேன் என்றார்"

  தனது நம்பிக்கையைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட மஞ்சிமா, "நான் எப்போதுமே இப்படி இல்லை! என் மீது நானே மிகக் குறைந்த மரியாதையைக் கொண்டிருந்தேன், மேலும் என்னைப் பற்றி நிறைய சந்தேகம் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன், இன்னும்  அதை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறேன்" என்று எழுதினார்.

  10 வருடங்கள் கழித்தும் அது மாறவில்லை... வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!

  கவுதம் கார்த்திக்- மஞ்சிமா ஜோடி தனது காதலை உலகிற்கு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தனர். நடிகர் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா  தங்களது காதலை வெளிப்படுத்தி சோஷியல் மீடியாவில் பதிவிட, அதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

  முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தின்போது கவுதமுக்கும், அதில் நடித்த மஞ்சிமா மோகனுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டு, பின்னாளில் காதலாக வளர்ந்துள்ளது.

  சேலையில் நடிகை அன்னா பென் - ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்!
   
  View this post on Instagram

   

  A post shared by Manjima Mohan (@manjimamohan)  சோஷியல் மீடியாவில் கவுதமும், மஞ்சிமாவும் தங்களது காதலை அறிவித்தனர். இதுபற்றி மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘3 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னை முழுவதும் இழந்திருந்தபோது காக்கும் தேவதையாக நீ வந்தாய். என் எண்ணத்தை மாற்றி நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர வைத்தாய். பிரச்னைகளை ஏற்றுக் கொண்டு நான் நானாக இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்தவன் நீ. எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் நீ இருப்பாய்’ என்று கவுதம் கார்த்திக்கை பார்த்து உருகியுள்ளார் மஞ்சிமா மோகன். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

   

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress Manjima Mohan, Kollywood, Tamil Cinema