• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் படத்தைப் பார்த்து மலையாள சினிமா ஏன் பயப்படுகிறது?

விஜய் படத்தைப் பார்த்து மலையாள சினிமா ஏன் பயப்படுகிறது?

விஜய்

விஜய்

குருப் படம் வெளியானதை முன்னிட்டு ஒரு புள்ளி விவரம் வெளியானது. இதனைப் பார்த்தால் மலையாள திரையுலகம் ஏன் விஜய் படங்களுக்கு வழிவிடுகிறது என்பது புரியும்.

  • Share this:
    விஜய் நடிக்கும் படம் வெளியாகும் போது மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களையே தள்ளி வைப்பார்கள். இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள் அவரது படங்களுடன் மோதுவதில்லை. கேரளாவில் விஜய் படங்களுக்கு அந்தளவு ஓபனிங் இருக்கும். அவர் படத்துடன் வெளியானால், நம்முடைய படம் காணாமல் போகும் என்ற அச்சம்.

    குருப் படம் வெளியானதை முன்னிட்டு ஒரு புள்ளி விவரம் வெளியானது. இதனைப் பார்த்தால் மலையாள திரையுலகம் ஏன் விஜய் படங்களுக்கு வழிவிடுகிறது என்பது புரியும்.

    கேரளா திரையரங்குகளில் முதல்நாளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட முதல் பத்து படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் படங்கள்...

    10. மாஸ்டர் - 1300 காட்சிகள்

    09. பாகுபலி 2 - 1370 காட்சிகள்

    08. பிகில் - 1427 காட்சிகள்

    07. காயங்குளம் கொச்சுண்ணி - 1612 காட்சிகள்

    06. லூசிபர் - 1720 காட்சிகள்

    05. மாமாங்கம் - 1751 காட்சிகள்

    04. சர்கார் - 1763 காட்சிகள்

    03. 2.0 - 1873 காட்சிகள்

    02. ஒடியன் - 1975 காட்சிகள்

    01. குருப் - 2050 காட்சிகள்

    இந்த பத்தில் மம்முட்டி படம் ஒன்று (மாமாங்கம்). நிவின் பாலி படம் ஒன்று (காயங்குளம் கொச்சுண்ணி). துல்கர் சல்மான் படம் ஒன்று (குருப்). ரஜினி படம் ஒன்று (2.0). மோகன்லால் படங்கள் மூன்று (லூசிபர், ஒடியன், காயங்குளம் கொச்சுண்ணி). விஜய் படங்கள் மூன்று. மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இணையாக வருகிறார் விஜய். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் மாஸ்டர் வெளியான போதும் கேரளாவில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டது.

    இதேபோல் கேரளா முதல் நாள் வசூலிலும் விஜய் படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. விஜய் படங்கள் வெளியாகும் போது மலையாளப் படங்கள் தள்ளிப் போவதன் காரணத்தை முதல் நாள் காட்சிகளின் எண்ணிக்கை தெளிவாக புரிய வைக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: