Home /News /entertainment /

முத்தையா படத்தின்மூலம் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியது ஏன்? இயக்குனர் ஷங்கர் விளக்கம்

முத்தையா படத்தின்மூலம் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியது ஏன்? இயக்குனர் ஷங்கர் விளக்கம்

இயக்குனர் ஷங்கர்- அதிதி

இயக்குனர் ஷங்கர்- அதிதி

விருமன் படத்துடைய கதை எனக்கு தெரியாது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கிறார்கள் என்று கூறினார்கள். அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.

    முத்தையா இயக்கத்தில், மகள் அதிதியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருக்கும் பதில் பாராட்டை பெற்று வருகிறது.

    சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா, விருமன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12ஆம் தேதி விருமன் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் மட்டும் மற்றும் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

    ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் ஷங்கர், பாரதிராஜா, சூர்யா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    விருமன் படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து நிகழ்ச்சியில் ஷங்கர் பேசியதாவது-

    விருமன் படத்துடைய கதை எனக்கு தெரியாது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கிறார்கள் என்று கூறினார்கள். அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தொடர்ந்து அவர்கள் நல்ல படம் எடுத்து வருவதால் என்னுடைய மகளை அறிமுகப்படுத்த சம்மதித்தேன்.

    இயக்குனர் முத்தையாவின் படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரது படத்தில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதனால் என்னுடைய மகளை முத்தையா படத்தில் அறிமுகப்படுத்த சம்மதித்தேன். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளன. கேமரா மற்றும் ஆர்ட் வேலைகள் மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக அமைந்திருப்பதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு இயக்குனர் ஷங்கர் கூறினார்
    Published by:Musthak
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி