வேண்டும் என்று செய்தது தான் - செல்ஃபி சர்ச்சைக்கு கஸ்தூரி பதிலடி

ஃபோட்டோ எடுப்பதைக்கூட மரியாதையாகக் கேட்டு எடுக்கத் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது - கஸ்தூரி

news18
Updated: March 4, 2019, 7:30 PM IST
வேண்டும் என்று செய்தது தான் - செல்ஃபி சர்ச்சைக்கு கஸ்தூரி பதிலடி
நடிகர் கார்த்தி, கஸ்தூரி
news18
Updated: March 4, 2019, 7:30 PM IST
‘ஜூலை காற்றில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது தான் செல்ஃபி முயற்சி என்று நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஜூலை காற்றில்’. ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கார்த்தியை மேடைக்கு பேச அழைத்த நடிகை கஸ்தூரி, கையில் செல்போனை வைத்துக்கொண்டு இங்கு வாங்களேன் நம்ம செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று அழைத்தார். மேலும் உங்க அப்பா இங்கு இல்லை. அதனால் அவசரமாக செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்றும் நடிகை கஸ்தூரி கூறினார்.




இதுதேவையில்லாத விஷயமாக இருக்கிறது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் பேசத் தொடங்கிய நடிகர் கார்த்தி, “ செல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லாமல் முகத்துக்கு முன்னால் கேமராவை நிறுத்துகிறார்கள். பின்னால் ஒரு ஃபிளாஷ், முன்னால் ஒரு ஃபிளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆவான். ஒரு விவஸ்தையே கிடையாது.

ஃபோட்டோ எடுப்பதைக்கூட மரியாதையாகக் கேட்டு எடுக்கத் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது. இப்படிச் சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் சொல்ல முடியாது” என்று பேசினார்.

Loading...



இதையடுத்து சிவகுமாரின் செல்ஃபி விவகாரம் போன்று கஸ்தூரியின் நடவடிக்கையும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை கஸ்தூரி, ‘‘ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது . வொர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிறவர்கள் கண்டிப்பாக ஜுலை காற்றில் படத்தை என்ஜாய் பண்ணுவீங்க” என்று கூறியுள்ளார்.



மகனின் பிறந்தநாளை 5 ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடிய அஜித் - வைரலாகும் புகைப்படம்

தென்சென்னையில் உதயநிதி போட்டியிட திமுக நிர்வாகி விருப்ப மனு - வீடியோ

First published: March 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...