முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆமிர்கானின் லால் சிங் சத்தா படம் வரவேற்பை பெறாதது ஏன்? நடிகர் மாதவன் விளக்கம்

ஆமிர்கானின் லால் சிங் சத்தா படம் வரவேற்பை பெறாதது ஏன்? நடிகர் மாதவன் விளக்கம்

மாதவன்

மாதவன்

இந்தியில் வெளியிடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆமிர்கானின் லால் சிங் சத்தா உள்பட கடந்த சில மாதங்களாக வெளியான இந்தி படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. இதற்கு என்ன காரணம் என இந்தி திரையுலகமே ஆராய்ச்சி நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஃபாரெஸ்ட் கெம்ப் என்ற படத்தை பாலிவுட் முன்னணி நட்சத்திரம் ஆமிர்கான் லால் சிங் சத்தா என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 11ம் தேதி இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியானது.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவாக இருந்தது. சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்கள்.

Natchathiram Nagargiradhu Official Trailer | கவனம் பெறும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

இதற்கு முன்பு வெளிவந்த பிரித்விராஜ் சவுகான், ஷம்ஷெரா உள்பட பெரிய பட்ஜெட் படங்களும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்தி படங்களின் பின்னடைவு பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் மாதவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

படத்தில் நல்ல கதையம்சம் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். அவர்கள் மொழியை பார்ப்பதில்லை. இதனால்தான் தென்னிந்திய மொழிப் படங்களும், ஹிந்தி வட்டாரத்தில் நல்ல வசூலை பெற்றுள்ளன.

Baakiyalakshmi serial : ஆட்டத்தை ஆரம்பித்த கோபி.. ராதிகா சொல்ல போகும் பதில் என்ன?

கொரோனா காலத்திற்குப் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறியுள்ளது. அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நாம் படங்களை கொடுக்கும்போது, நிச்சயம் அவர்கள் நம்முடைய படங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

அத்தகைய படங்கள் வருங்காலத்தில் இந்தியில் வெளியாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

top videos

    இந்தியில் வெளியிடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Actor Madhavan