Raghava Lawrence: கமல் படத்திலிருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்

Raghava Lawrence: கமல் படத்திலிருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்

ராகவா லாரன்ஸ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிக்கும் விக்ரம் படத்தில், ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதாக இருந்தது.

  • Share this:
    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிக்கும் விக்ரம் படத்தில், ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதாக இருந்தது. திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொள்ள, தற்போது பகத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர். அதன் காரணமாகவே அவர் விக்ரம் படத்திலிருந்து விலகினார் என்பது தொடங்கி, அவர் விலகலுக்கு ஒரு டஜன் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் உண்மை என்ன என்பதை லாரன்ஸ் விளக்கியுள்ளார்.

    லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் பிஸியாக இருக்கிறார். கதிரேசன் தயாரிப்பில், ஜீவி.பிரகாஷ் இசையில் ருத்ரன் தயாராகி வருகிறது. அத்துடன் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் கால பைரவா படத்தை இயக்கி, நடிக்க உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகிறது.

    அடுத்தடுத்து பிரமாண்ட படங்களை இயக்கி நடிக்கவிருப்பதால், விக்ரம் படத்திற்கு அவர்கள் கேட்ட தேதிகளை லாரன்ஸால் ஒதுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே விக்ரம் படத்திலிருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: