சுசாந்த் சிங் மறைவு... நடிகர் அமிதாப் பச்சன் உருக்கம்

சுசாந்த் சிங் மறைவு... நடிகர் அமிதாப் பச்சன் உருக்கம்
அமிதாப் பச்சன் மற்றும் சுசாந்த் சிங்
  • Share this:
நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவிற்கு நடிகர் அமிதாப் பச்சன் உருக்கமான இரங்கல் மடல் விடுத்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் அவரது இரங்கல் செய்தியில், திறமைவாய்ந்த நடிகர் மறைந்துள்ளதாகவும், தோனி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அத்திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றில், எப்படி கிரிக்கெட் வீரர் தோனியைப் போன்றே சிக்ஸர் ஷாட் அடித்தீர்கள் என்று தாம் கேட்டதற்கு, உண்மையான தோனியின் வீடியோவை நூறு முறைக்கும் மேல் பார்த்து அந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக சுசாந்த் கூறியதாகவும் அமிதாப் நினைவுகூர்ந்துள்ளார்.

Also read... சுஷாந்த் சிங் உயிரிழப்பு - பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading