Home /News /entertainment /

புஷ்பா 2 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்… காரணம் இது தானாம்…

புஷ்பா 2 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்… காரணம் இது தானாம்…

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பது குறித்த காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த காரணங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

    சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. செஞ்சந்தனம் மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக தொடங்கி, மிகப்பெரிய கடத்தல் தாதாவாக அல்லு அர்ஜுன் உருவாகுவது முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும்.

    சைக்கிளில் 1540 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்த ஆர்யா!

    விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடியான பாடல்கள் மனதை ஈர்க்கும் காதல் காட்சிகள் என புஷ்பா திரைப்படம் மிகச்சிறப்பான கமர்சியல் திரைப்படமாக வெளியானது. படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவிற்கு குறிப்பிடத்தகுந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. வில்லன்களாக பகத் பாசில், தனஞ்செய், சண்முக், சுனில், அனுசுயா பரத்வாஜ் அஜய் கோஸ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

    புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பது குறித்த காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

    Ajith 61: அஜித் 61 படத்தின் அட்டகாச அப்டேட்!

    இதில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் படத்தில் இடம் பெறவில்லை. ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

    ஜவான் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கப்பட்டுள்ள அதே தேதியில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக புஷ்பா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி இருப்பதாக தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay Sethupathi

    அடுத்த செய்தி