முதல்முறையாக சிறந்த நடிகர் விருது 2 பேருக்கு ஏன்? தேசிய விருது குழுவில் இருந்த கங்கை அமரன் விளக்கம்

கங்கை அமரன்

முதல்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் என இரு நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Share this:
மத்திய அரசின் சார்பில் தோறும் சினிமா துறைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேசி விருது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், 2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில், 2019 ஆண்டின் சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறனின் அசுரன் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி. என்கிற கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து தேசிய விருது தேர்வுக் குழுவில் ஜூரியாக உள்ள கங்கை அமரன் பேசிய போது, " தேசிய திரைப்பட விருதுகளுக்காக ஒரு நாளைக்கு 4 முதல் 5 படங்கள் என ஒரே மாதத்தில் 106 படங்கள் வரை பார்த்திருக்கிறோம். இதில் தேர்வு செய்வது ரொம்ப கடினமாக இருந்தது. ஏனென்றால், நிறைய புதிய படங்கள் வந்திருந்தது. இதில் தமிழுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று 7 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளது. புதியவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம்.

இந்த முறை எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. எதற்காகவும் ஜூரிகளிடம் சண்டை போடும் அவசியம் ஏற்படவில்லை. வெற்றிமாறனின் அசுரன் படத்தை சிறந்த படமாக ஒத்துக்கொள்வதிலும் தனுஷை சிறந்த நடிகராகவும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே ஒத்துக்கொண்டார்கள். தனுஷின் நடிப்பும், மனோஜ் பாஜ்பாயின் நடிப்பும் சரி சமமாக இருப்பது போல் உணர்ந்ததால் தான் இருவருக்கும் சிறந்த நடிகருக்கான விருது பகிர்ந்தளிக்கபட்டுள்ளது." எனக் கோரினார்.

மேலும், பார்த்திபனின் ஒத்த செருப்பு பத்துக்கு எந்த கேட்டகிரியில் விருது கொடுப்பது என்று தெரியவில்லை. ஏனென்றால், கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாப் பிரிவிலும் பார்த்திபன்தான் செய்திருந்தார். இறுதியாக எந்த பிரிவில் விருது என்று கேட்டபோது, எல்லா வகையிலும் சிறந்த படம் என்று கூறினார்கள். அதனால் தான் சிறப்பு ஜூரி விருது மற்றும் சிறந்த ஒளியமைப்பிற்கான விருது என இரண்டு விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. அதுவே, சந்தோஷமாக இருந்தது. ” என்றும் கூறினார்.

சிறந்த நடிகைக்கான பிரிவில் பாலிவுட் நடிகைகளைப் போல தமிழ் நடிகைகளுக்கு என் விருதுகள் வழங்கப்படவில்லை என கேட்ட போது, "பாலிவுட்டில் கதாநாயகிகளை மையப்படுத்தி சிறந்த படங்கள் வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததால் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை அதனால்தான் விருது கிடைப்பதில்லை" என தேர்வுக்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வைத்து வழங்கப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தால் இந்த ஆண்டும் அதே நாளில் விருது வழங்கும் விழா நடைபெறும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published by:Vijay R
First published: