சேர்ஷாவுக்கு பின் விஷ்ணுவர்தன் இயக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா?

விஷ்ணு வர்தன்

விஷ்ணுவர்தன் இந்தமுறை அணுகியிருப்பது நடிகர் வைஷ்ணவ் தேஜ்.

 • Share this:
  சேர்ஷா படம் சமீபத்திய ஓடிடி வெளியீடுகளில் சூப்பர்ஹிட்டான திரைப்படம். கார்கில் ஹீரோ கேப்டன் விக்ரம் பத்ராவின் சாகசங்களை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். படத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

  விஷ்ணுவர்தன் கடைசியாக தமிழில் இயக்கிய படம் யட்சன், 2015-ல் வெளியானது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் தமிழில் அவர் படம் இயக்கவில்லை. கடைசிப்படம் சேர்ஷா வெளியானது இந்தியில். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் படம் இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில், மும்பையிலிருந்து அப்படியே ஹைதராபாத்துக்கு பிளைட் ஏறியுள்ளார் விஷ்ணுவர்தன். ஆம், அடுத்தப் படத்தை அவர் தெலுங்கில் இயக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பவன் கல்யாண் நடிப்பில் ஒரு படத்தை அவர் தெலுங்கில் இயக்கியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விஷ்ணுவர்தன் இந்தமுறை அணுகியிருப்பது நடிகர் வைஷ்ணவ் தேஜ். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த உப்பன்னா படத்தில் இவர்தான் ஹீரோ. இவரைத்தான் புதிய கதையுடன் அணுகியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

  Who knows the hero that Vishnuvardhan will be directing after Shershaah, Shershaah, Biopic of Kargil Hero Vikram, Shershaah movie, Shershaah movie release, Shershaah release, vishnuvardhan director, vishnuvardhan (director) movies, vishnuvardhan director wiki, vishnuvardhan (director) movie list, vishnuvardhan (director) age, vishnuvardhan tamil moviesm விஷ்ணு வர்தன், இயக்குநர் விஷ்ணு வர்தன்
  வைஷ்ணவ் தேஜ்


  லிங்குசாமி, மோகன்ராஜா, ஷங்கர் என தமிழின் முக்கிய இயக்குனர்கள் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார்கள். இப்போது விஷ்ணுவர்தனும் அவர்களுடன் இணைந்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: