Home /News /entertainment /

விக்ரமாதித்யா யார்? - வெளியாகிறது ராதே ஷ்யாம் டீஸர்...!

விக்ரமாதித்யா யார்? - வெளியாகிறது ராதே ஷ்யாம் டீஸர்...!

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை. அதனால், ராதே ஷ்யாம் படத்தின் வெற்றியை பிரபாஸ் அதிகம் எதிர்பார்க்கிறார்.

  • News18
  • Last Updated :
பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் 2022 ஜனவரி 14 வெளியாவதை உறுதி செய்துள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

முதல்கட்டமாக படத்தில் பிரபாஸ் ஏற்று நடித்திருக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தை விளக்கும் டீஸர் ஒன்றை 23 ஆம் தேதி வெளியிடுகின்றனர். இதனை அறிவிக்கும்விதமாக புதிய போஸ்டர் ஒன்றை விக்ரமதித்யா யார் என்ற கேள்வியுடன் வெளியிட்டுள்ளனர்

பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனி போஸ்டர் வெளியிட்டிருந்தனர். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். 23 ஆம் தேதி வெளியாகும் டீஸரில் வாய்ஸ் ஓவர் ஆங்கிலத்தில் இருக்கும். ஐந்து மொழி சப்டைட்டிலுடன் இதனை வெளியிட உள்ளனர்

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை. அதனால், ராதே ஷ்யாம் படத்தின் வெற்றியை பிரபாஸ் அதிகம் எதிர்பார்க்கிறார்.



காதலுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் செலவளித்த பணத்தை திரும்பப் பெற்றுத் தருமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அத்துடன் ராதே ஷ்யாம் வெளியாவதற்கு சரியாக ஏழு நாள்கள் முன்பு ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் வெளியாகிறது. இவையெல்லாம் ராதே ஷ்யாமின் தடைக்கற்களாகப் பார்க்கப்படுகின்றன

Also read... Bigg Boss Promo: அபிஷேக்கின் கேவலமான கேம் பிளான் - கடுப்பான பிரியங்கா, வருண்!

ஆனால், படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் உறுதியாக இருக்கிறார். படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்பதில் அவருக்கு சந்தேகமேயில்லையாம். நம்பிக்கைத்தானே வாழ்க்கை.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor prabhas

அடுத்த செய்தி