நடிகர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் நடிகர் சங்கத்தில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டி போட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
நடிகர் சங்கத்தில் அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று விஷால் அணியினர் மூன்றாண்டு காலம் சங்கத்தை நிர்வகித்த நிலையில் நடிகர் சங்க கட்டடம் விரைந்து கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் தலைமையில் புதிய அணி ஒன்று கட்டமைக்கப்பட்டது.
விஷால் அணியில் செயல்பட்ட உதயா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் அணிமாறி ஐசரி கணேஷ் தலைமையிலான புதிய அணியை கட்டமைக்க களமிறங்கினர். தலைவர் பதவி வகித்து வந்த நாசருக்கு எதிராக புதிய தலைவராக நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் களமிறக்கப்பட்டார்.
செயலாளர் பதவிக்கு விஷாலுக்கு எதிராக நடிகர் ஐசரி கணேஷ் நேரடியாக களம் இறங்கினார். பொருளாளர் பதவி வகித்து வந்த நடிகர் கார்த்திக்கு எதிராக நடிகர் பிரஷாந்த் களமிறக்கப்பட்டார். கடந்தமுறை துணைத்தலைவர் பதவி வகித்த பொன்வண்ணன் இந்த முறை போட்டி போட விரும்பாத நிலையில் அவருக்கு பதிலாக பூச்சி முருகன் களமிறங்கினர்.
அவரை எதிர்த்து ஐசரி கணேஷ் அணியில் நடிகர் உதயா போட்டியிட்டார். இதேபோல மற்றொரு துணைத்தலைவர் பதவிக்கு ஏற்கனவே அந்த பதவியில் இருந்த கருணாஸ் போட்டியிட அவருக்கு எதிராக குட்டிபத்மினி களம் கண்டார். இவை தவிர இரண்டு அணிகளிலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக தல 24 பேர் தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர்.
இவர்களுக்கான வாக்கு பதிவு கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nadigar Sangam