Home /News /entertainment /

பீஸ்ட்டுக்கு குவைத்தில் தடை-எந்தெந்த தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன?

பீஸ்ட்டுக்கு குவைத்தில் தடை-எந்தெந்த தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன?

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன.

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட தமிழ் படங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

    நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழர்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு குவைத்தில் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. அண்மையில் வெளியான குரூப் மற்றும் எப்ஐஆர் ஆகிய திரைப்படங்களுக்கும் குவைத் தடை விதித்திருந்தது.

    துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படத்தில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி குழுவுக்கு குவைத் நாடு தஞ்சம் அளிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் அந்த படத்திற்கும் அந்நாடு தடை விதித்தது.

    இதேபோல, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதால் அந்த திரைப்படத்திற்கும் தடை விதித்தது. இதே காரணத்திற்காக கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்தை மலேசிய அரசு தடைவிதித்திருந்தது. மலேசியாவில் வெளியான விஸ்வரூபம் திரைப்படம் அடுத்த நாளிலிருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    மேலும் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட ரஜினியின் கபாலி திரைப்படமும் மலேசியா நாட்டை வன்முறையாளர்கள் நிரம்பிய நாடாக காட்டுவதாகவும், போதைப்பொருள் கடத்தல், வன்முறை உள்ளிட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் கூறி முப்பதிற்கும் மேற்பட்ட சென்சார் வெட்டுக்கள் போட்டு படத்தை மொத்தமாக குதறித் தள்ளியது.

    Thalapathy 66: ராஷ்மிகாவின் ஃபேன் கேர்ள் மொமெண்ட்... வைரலாகும் விஜய்யின் தளபதி 66 பூஜை படங்கள்!

    குவைத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தடை மலேசியாவிலும் எதிரொலிக்குமோ என்ற அச்சம் தற்போது திரைத்துறையில் நிலவி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு நிகராக வர்த்தகம் நிகழ்த்தும் பகுதிகள் என்பதால் மலேசியா என்ன முடிவு எடுக்கும் என்பதை எதிர்நோக்கி திரைத் துறையினர் அச்சத்தோடு காத்துக் கொண்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Beast

    அடுத்த செய்தி