ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடிகர் சூர்யா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் மவுனமாக இருப்பது ஏன் என இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒளிப்பதிவு சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வருவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் திரைத்துறைத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் முன்னணி இயக்குனர்களான கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சீனு ராமசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்திக் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ்நாடு அரசும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Also Read : ஒளிப்பதிவு திருத்த சட்டத்தால் பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற படங்களை கூட முடக்க முடியும்: சத்யராஜ் பேச்சு!
இந்நிலையில், முக்கிய இயக்குனர்கள் பங்கேற்ற இணையவழி விவாதத்தில் பேசிய இயக்குனர் அமீர், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் நிலையில், முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை என விமர்சித்தார். சட்டத் திருத்தத்திற்கு எதிராக கருத்துக் கூறிய சூர்யாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தபோது கூட, சூர்யாவுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என ஆதங்கப்பட்டார்.
அனைத்து வாரியங்களையும் அரசே ஏற்று நடத்தினால், இது அதிபர் ஆட்சியாக மாறிவிடும் எனக் கூறிய அமீர், சென்சார் போர்டு போன்று தன்னாட்சி அதிகார அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்றார். ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக பேசிய இயக்குனர் பாரதிராஜா, கருத்து சரியா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், இந்த சட்டத் திருத்தத்தை தடுத்து நிறுத்த மிகப்பெரிய போராட்டம் தேவை என்றும் கூறினார்.
Also Read : ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது-இயக்குநர் வெற்றிமாறன்
ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா, இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், இதற்கு கடுமையான கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.