கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லரில் சூர்யாவின் முகம் எங்கும் இடம்பெறவில்லை. ஆனால் இந்த கேரக்டர்தான் சூர்யா என சமூக வலைதளங்களில் விவாதம் சூடாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்தாண்டின் மிக பிரமாண்டமான படைப்புகளில் ஒன்றாக விக்ரம் படத்தை சொல்லலாம். சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு கெத்தான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கமல் மிகவும் கவர்ந்துள்ளார். இதேபோல் படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய வில்லன்களுக்கும் அதிக காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசிலை லோகேஷ் சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் சில வாரங்களுக்கு முன்புதான் வெளியானது. அந்த அளவுக்கு விக்ரம் படக்குழுவினர் சீக்ரட்டை பாதுகாத்துள்ளனர்.
இதையும் படிங்க - கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பில் விக்ரம் ட்ரெய்லர் வெளியீடு…
நேற்று ட்ரெய்லர் வெளியானபோது, சூர்யா ரசிகர்கள் எங்கே சூர்யா என தேடிப்பார்த்தனர். ஆனால் சூர்யாவின் முகத்தை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், ட்ரெய்லர் காட்சியில் இரத்தமும், சதைத் துண்டுகளாக இருக்கும் பட்டாக்கத்தியை ஒருவர் வீசுகிறார். இந்த நபர்தான் சூர்யா என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு என்ன கேரக்டர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க - கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்
கைதி 2 படத்தை எடுக்கும் திட்டத்தில் லோகேஷ் கனகராஜ் உள்ளார். கைதி, கைதி 2 படங்களுக்கும் விக்ரம் படத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதியில் வில்லன்களாக வரும் அன்பு, அடைக்கலம் கேரக்டர்களுக்கு சூர்யாதான் பாஸ் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
விக்ரம் ட்ரெய்லரைப் பார்க்க...
இப்படி பல எதிர்பார்ப்புகளும், சுவாரசியங்களும் அடங்கியுள்ள விக்ரம் படத்தை காண, ஜூன் 3-ம்தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.