ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘எதை நோக்கி நாம் செல்கிறோம்?’ – வைரலாகும் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவு

‘எதை நோக்கி நாம் செல்கிறோம்?’ – வைரலாகும் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவு

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

Actor Prakash Raj : மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை, நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றன.ர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

எதை நோக்கி நாம் செல்கிறோம்? என்று கேள்வி எழுப்பி அசோகர் சின்ன சிங்கங்களுடன் பிரகாஷ்ராஜ் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை, நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றன.ர்

ட்விட்டர் சமூக வலைதளத்தில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், தேசிய சின்னமான 4 சிங்கங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் முகங்கள் பழைய சிங்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாகவும், இது சரியானதல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு - சென்னை உயர் நீதிமன்றம்

இதை பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் எழுப்பியுள்ளனர். அசோகரின் பௌத்த சாரநாத் தூணின் நான்முக சிங்க உருவம்தான் இந்திய அரசின்சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டு இன்றுவரை நாணயங்களிலும் இதர அரசுமுத்திரைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள அசோகர் சின்னத்தில் உள்ள சிங்கங்களின் முகங்கள் கோரமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்று, வடிவமைப்பு செய்திருப்பது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதற்கு மோடியின் புதிய இந்தியாவில் சிங்கங்கள் கம்பீரமாக ஆக்ரோஷமாக இருக்கும் என்று பாஜக ஆதரவாளர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமர், அனுமர் மற்றும் அசோக சின்னத்தில் உள்ள நான்கு சிங்க முகங்கள் ஆகியவற்றின் பழைய படங்களையும், புதிய படங்களையும் வெளியிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் எதை நோக்கி நாம் செல்கிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம் - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

அவரது இந்தப்பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது இதற்கு பாஜக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அவரது ட்விட்டர் கணக்கில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Actor Prakashraj