ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இனி வீட்டிலேயே PS பார்க்கலாம்.. ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன்!

இனி வீட்டிலேயே PS பார்க்கலாம்.. ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தீபாவளியையொட்டி பிரின்ஸ், சர்தார் படங்கள் வெளிவந்த போதிலும், பொன்னியின் செல்வன் திரைப்படம் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

    இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதனை விஞ்சும் விதமாக படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும், நடிகர்கள் வெளிப்படுத்திய அட்டகாசமான நடிப்பும் இருந்ததால் படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி வருகிறது.

    ஏஆர் ரகுமான் ரெடி.. தொடங்கியது 'மாமன்னன்' பின்னணி இசை கோர்ப்பு பணி!

    ஒட்டுமொத்தமாக இந்த படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்னைகளை எதிர்கொண்டு நேர்த்தியான முறையில் இந்த படத்தை உருவாக்கிய இயக்குனர் மணிரத்னத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதற்கிடையே தீபாவளியையொட்டி பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய 2 படங்கள் வெளிவந்த போதிலும், பொன்னியின் செல்வன் திரைப்படம் நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒ.டி.டி தளத்தில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளிக்கு எது டாப்... பிரின்ஸ் மற்றும் சர்தார் படத்தின் முதல் நாள் வசூல்

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஒட்டுமொத்தமாக 125 கோடி ரூபாய்க்கு ஓ.டி.டி.-யில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan