எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்? : நிக் - பிரியங்கா ஜோடி பதில்!

என் தோழிகள் ஏற்கெனவே குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். நீயும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள் என்பதுதான் அவர்கள் எனக்கு கூறிய அறிவுரை என்றார்.

news18
Updated: May 11, 2019, 8:08 PM IST
எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்? : நிக் - பிரியங்கா ஜோடி பதில்!
பிரியங்கா - நிக் ஜோனஸ்
news18
Updated: May 11, 2019, 8:08 PM IST
எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்ற கேள்விக்கு பிரியங்கா - நிக் ஜோடி முதல்முறையாக பதிலளித்துள்ளது.

விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டுக்குச் சென்ற இவர், தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தன்னை விட 10 ஆண்டுகள் இளையவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. சுவிட்ஸர்லாந்தில் தேனிலவை முடித்த இந்த தம்பதியர் அவரவர் துறையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே திடீரென பிரியங்கா நிக்கை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அது வதந்தியாகிப் போனது.இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு பிரியங்காவிடம் பலரும் கேட்ட கேள்வி எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான். இதற்கு அண்மையில் பேட்டி ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா, “குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கும் ஆசைதான். அது நிச்சயம் நடக்கும். ஆனால் அது கடவுள் நினைக்கும்போது மட்டும் தான்” என்று பதிலளித்துள்ளார்.கடந்த வருடம் திருமணம் முடிந்து புதிதாக குடும்பத்தைத் தொடங்குவது பற்றி பிரியங்காவிடம் கேட்ட போது “என் தோழிகள் ஏற்கெனவே குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். நீயும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள் என்பதுதான் அவர்கள் எனக்கு கூறிய அறிவுரை என்றார்.பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் கூறுகையில், சில சமயங்களில் குழந்தை வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். அது உண்மையிலேயே எனக்கு பெரிய கனவுதான். நிச்சயம் அந்த அழகான கனவு விரைவில் நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதை நீங்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இந்த இளைய வயதிலேயே உனக்கு இதெல்லாம் தேவைதானா என்று பலர் சொல்லக்கூடும். ஆனாலும் இந்த வயதுக்குள்ளாக என் வாழ்வில் சந்தித்த ஏற்ற இரக்கங்கள் ஏராளம். அந்த அனுபவங்களை எனது வாரிசுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ளவே விரும்புவேன்” என்றார்.

வீடியோ: பிரியங்கா சோப்ராவுக்கு பதிலாக மம்தா பானர்ஜியின் முகம்! – பாஜக நிர்வாகி கைது

First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...