ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட்டை வெளியிட்ட ராக்கி பாய் யாஷ்!

கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட்டை வெளியிட்ட ராக்கி பாய் யாஷ்!

யாஷ்

யாஷ்

சலார் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படங்கள் இயக்குனர் பிரசாந்த் நீலுடைய கே.ஜி.எஃப். யூனிவர்சுக்குள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கே.ஜி.எஃப். 3 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில் அதுகுறித்த அப்டேட்டை ஹீரோ யாஷ் வெளியிட்டுள்ளார்.

  2018ம் ஆண்டு இறுதியில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற ரசிகர்களை முழு திருப்தி அடையச் செய்தது. இதுநாள் வரையில் வெளிவந்த சிறந்த டான் படங்களில் ஒன்றாக கேஜிஎஃப் படம் கொண்டாடப்பட்டது.

  படத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான தொடக்கம் குறித்த காட்சி இடம் பெற்றதால் பார்ட் 2 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இதற்கிடையே, கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு 2021 ஜூலை மற்றும் 2022 ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கடைசியாக 2021 ஏப்ரல் 13-ம்தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

  மீண்டும் சூப்பர் கூட்டணி! 35 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல்ஹாசன்! சூப்பர் அப்டேட்!

  பார்ட் 1யைப் போலவே இரண்டாம் பாகத்திலும், 3ஆவது பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு பாகத்துடன் படம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் 3ஆம் பாகம் வெளிவரும் என்பதை தயாரிப்பாளர் தரப்பு உறுதி செய்தது.

  ஆனால், படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துக் கொண்டு ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அதேநேரம் கேஜிஎஃப் ஹீரோ அடுத்ததாக எந்த படத்திலும் நடிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

  யசோதா முதல் மிரள் வரை… நவம்பர் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்!

  இதனால் கே.ஜி.எஃப். 3 ஆம் பாகத்திற்கான ஷூட்டிங் தொடங்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கு யாஷ் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-

  எனது அடுத்த படம் கே.ஜி.எஃப். 3 ஆம் பாகம் அல்ல. இப்போதைக்கு உடனடியாக கே.ஜி.எஃப். 3 தொடங்காது. எனது அடுத்த படம் குறித்து வெளிவரும் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள். நான் கொஞ்சம் வித்தியாசமான படத்தில் நடிக்க விரும்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  சலார் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படங்கள் இயக்குனர் பிரசாந்த் நீலுடைய கே.ஜி.எஃப். யூனிவர்சுக்குள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான பதிலை பிரசாந்த் தான் சொல்ல வேண்டும்.

  Published by:Musthak
  First published:

  Tags: KGF