நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் விளக்கம்

நயன்தாரா 100 படங்களில் நடித்த பிறகே இவர்களுடைய திருமணம் நடைபெறும் என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: February 14, 2019, 11:18 AM IST
நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் விளக்கம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
Web Desk | news18
Updated: February 14, 2019, 11:18 AM IST
நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்த செய்தியை இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூகவலைதள பக்கத்தில் மறைமுகமாக உறுதிசெய்துள்ளார்.

காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த நயன்தாராவின் பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்தது நானும் ரவுடிதான் திரைப்படம். போடா போடி படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய அத்திரைப்படத்தில் நடித்த போது அவருடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.

பின்னர் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்துவரும் செய்தி தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன்பின் நயன்தாரா படங்களுக்கு கதை கேட்க தொடங்கிய விக்னேஷ் சிவன் அவர் படங்களை மெருகேற்றும் பணிகளிலும் ஈடுபட்டார். அந்த வகையில் டோரா, கோலமாவு கோகிலா என நயன்தாராவை மையப்படுத்தி உருவாகும் படங்களில் பாடலாசிரியராக விக்னேஷ் சிவன் பணியாற்றினார்.

"அவள்" திரைப்படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக நயன்தாரா அறிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த செய்தியும் அவ்வப்போது திரையுலகில் அதிகளவில் விவாதிக்கப்படும். இந்நிலையில் நயன்தாரா 100 படங்களில் நடித்த பிறகே இவர்களுடைய திருமணம் நடைபெறும் என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய தேதியில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்சமயம் ஐரா, விஜய் 63, மிஸ்டர் லோக்கல், சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் இயக்கும் புதிய படமொன்றை கூடிய விரைவில் இயக்கவுள்ளார்.

Also see... நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?
Loading...
First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...