Home /News /entertainment /

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? புதிய தகவலால் பரபரப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? புதிய தகவலால் பரபரப்பு

இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

Indian 2 Shoot Resume : மறைந்த நடிகர் விவேக் காட்சிகள் இந்தியன் 2 படத்தில் இடம்பெறுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய தகவல் ஒன்று, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது.

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 திரைப்படத்திற்கு 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.  மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.

இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ 

அந்த வேலைகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்க இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பில் நிறுவனமான லைகாவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க - விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்

தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனை தவிர சித்தார்த், பிரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளர். அதில் மறைந்த நடிகர் விவேக் காட்சிகள் இடம்பெறுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Kamalhaasan, Lyca

அடுத்த செய்தி