• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சந்தானத்தின் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா படங்கள் வெளியாவதில் என்ன சிக்கல்?

சந்தானத்தின் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா படங்கள் வெளியாவதில் என்ன சிக்கல்?

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

சர்வர் சுந்தரத்தை ஓடிடியில் அதிகபட்சமாக 4 கோடி ரூபாய்க்கு கேட்கிறார்கள் என்கிறது நெருக்கமான வட்டாரம். மீதியை சேட்டிலைட் உரிமையில் பார்த்துக் கொள்ள வேண்டும். விலை படியாததால் சர்வர் சுந்தரத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒருகாலத்தில் சந்தானம் படத்தில் இருந்தால் படத்தின் விற்பனை குறித்து கவலைப்பட வேண்டாம். உடனே உரிமை வாங்கப்படும். அவர் நாயகனான பிறகும் அவர் நடித்தப் படங்கள் வெளியாவதில் சிக்கல் இருந்ததில்லை. விதிவிலக்காக சர்வர் சுந்தரம், டிக்கிலோனா படங்கள் வெளியாவதில் தொடர் சிக்கல் இருந்து வருகிறது.

கொரோனா பேரிடர் கால நெருக்கடிகளால் பெரிய படங்களே ஓடிடியில் வெளியாகின்றன. சந்தானத்தின் படங்களை ஓடிடியில் வெளியிடுவதிலும் பல பிரச்சனைகள் என்பது ஆச்சரியம். என்ன என்று விசாரித்ததில் பல உண்மைகள் தெரிய வந்தன. முதலாவது சர்வர் சுந்தரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் சந்தானம் சர்வராக நடித்துள்ளார். படத்தை பிரமாதமாக எடுக்க வேண்டும் என்று கெனன்யா பிலிம்ஸ் விரும்பியதில் தவறில்லை. பிரபல செஃப் வெங்கடேஷ் பட்டை வைத்து சந்தானத்துக்கு ட்ரெய்னிங் தந்தனர்.



சென்னை, கோவா, துபாய் என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சொகுசு கப்பல் ஒன்றில் படப்பிடிப்பு நடத்தி கணிசமான பணத்தை செலவளித்தனர். எல்லாம் முடிந்து கணக்குப் பார்த்தால் 13 கோடிகளை தாண்டியிருக்கிறது பட்ஜெட். இதற்கு மேல் லாபம் வைத்து கேட்டால் யாரும் வாங்க முன்வரவில்லை.



சர்வர் சுந்தரத்தை ஓடிடியில் அதிகபட்சமாக 4 கோடி ரூபாய்க்கு கேட்கிறார்கள் என்கிறது நெருக்கமான வட்டாரம். மீதியை சேட்டிலைட் உரிமையில் பார்த்துக் கொள்ள வேண்டும். விலை படியாததால் சர்வர் சுந்தரத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது.

Also read... விஷால் 31 எப்போது நிறைவடைகிறது? - புதிய அப்டேட்!

டிக்கிலோனா படத்தின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். அவர்கள் பட்ஜெட் விஷயத்தில் உஷாராக இருந்ததால் சர்வர் சுந்தரம் அளவுக்கு நெருக்கடியில்லை. சேட்டிலைட், ஓடிடி உரிமைகளை பேக்கேஜாக பேசி வருகின்றனர். ஸீ நிறுவனம் அவர்கள் கேட்கும் விலைக்கு இணங்கி வந்துள்ளதாக தகவல். விரைவில் டிக்கிலோனாவின் ஓடிடி வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.  சந்தானம் நடிப்பில் வெளியாகாமல் உள்ள இன்னொரு படம் சபாபதி. அதுவும் ஓடிடியில் வெளியாகவே அதிக வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: