முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஸ்கர் நாமினிகளுக்கு வழங்கப்படும் ரூ.1 கோடி கிஃப்ட்... பரிசுத்தொகுப்பில் என்னென்ன இருக்கும் தெரியுமா?

ஆஸ்கர் நாமினிகளுக்கு வழங்கப்படும் ரூ.1 கோடி கிஃப்ட்... பரிசுத்தொகுப்பில் என்னென்ன இருக்கும் தெரியுமா?

பரிசு பொதி

பரிசு பொதி

அகாடமியுடன் இணைக்கப்படாத  லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட Distinctive Assets எனும் சந்தைப்படுத்தல் நிறுவனம் 2002 முதல்  இந்த கூடுதல் பரிசுகளை வழங்கி  வருகிறது. 

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

95வது ஆஸ்கர் விருதுகள் நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் அறிவிக்கப்பட்டன. இந்தியாவை சேர்ந்த தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற படம், சிறந்த ஆவண குறும்பட பிரிவிலும்,  சிறந்த ஒரிஜினில் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடழலும் விருது வென்றது. இயக்குநர் கார்த்திகி கான்சல்வேஸ் மற்றும்  இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி  விருதுகளை பெற்றனர்.

இருப்பினும், வெற்றியாளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், ஆனால் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்ட படங்களை சார்ந்தவர்களுக்கு  $126,000 (சுமார் ₹ 1.03 கோடி) மதிப்புள்ள பரிசுப் பையை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் முதன்மைப் பிரிவுகளில் இடம் பெறுபவர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. அகாடமியுடன் இணைக்கப்படாத  லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட Distinctive Assets எனும் சந்தைப்படுத்தல் நிறுவனம் 2002 முதல்  இந்த கூடுதல் பரிசுகளை வழங்கி  வருகிறது. 

அந்த வரிசையில் "எல்லோரும் வெற்றி பெறுகிறார்கள் (Everyone Wins)" என்ற பெயரில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய முக்கிய பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு  இது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசுப் பையில் ஜப்பானிய பால் ரொட்டி மற்றும் இத்தாலிய தீவுக்கான பயணம் மற்றும் ஒப்பனை சிகிச்சை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிலா பகுதி வரையிலான பொருட்கள் உள்ளன. பையில் மொத்தம் 60 பரிசுகள் உள்ளன. 

அந்த பரிசு பையில் இருக்கும் முக்கிய பரிசுகளை இங்கே பார்ப்போம்:

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள  சொகுசு விடுதியாக  தி லைஃப்ஸ்டைலில்(The Lifestyle)  மூன்று இரவு தங்குவதற்கான $40,000 (சுமார் 33 லட்சம்) மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்டவர் மற்றும் 7 நண்பர்கள் வரை இத்தாலியின் இஷியாவில் உள்ள Faro Punta Imperatore லைட்ஹவுஸில் மூன்று இரவு தங்கும் $9,000, (கிட்டத்தட்ட ₹ 7.3 லட்சம்) மதிப்பு கொண்ட  வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவை தவிர, மைசன்(maison constructions) கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மூலம் வீட்டு மறுசீரமைப்புக்கான திட்ட மேலாண்மை கட்டணமாக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு $25,000(20.5லட்சம் ) பரிசாக வழங்கப்படும். 

டாக்டர். தாமஸ் சூவின்"பெண்களுக்கு உடனடி மெலிந்த மற்றும் நிறமான தோற்றத்தைக் கொடுப்பதற்கான " $12,000(9.8 லட்சம்) மதிப்புள்ள கை லிபோசக்ஷன் செயல்முறை,பரிசாக வழங்க படுகிறது.

பரிந்துரைக்கப்பட்டவர்கள் $18 விலையுள்ள கின்சா நிஷிகாவாவிடமிருந்து பிரபலமான ஜப்பானிய பால் ரொட்டியும் வழங்கப்படுகிறது. $13.56 விலையுள்ள கிளிஃப் தின்ஸின் ஒரு பேக் கூட பரிசு பையின் ஒரு பகுதியாக உள்ளது.

தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆலன் ஜே. பாமன் உடனான தனிப்பட்ட முடி மறுசீரமைப்பு ஆலோசனையின்  $7,000 மதிப்பு கொண்ட சிறப்பு பரிசும் உள்ளது.

டாக்டர். கான்ஸ்டான்டின் வாஸ்யுகேவிச்சிடம் இருந்து $10,000 மதிப்புள்ள நடைமுறைகள், கெமிக்கல் பீல்ஸ், லேசர் ஸ்கின் ரிசர்ஃபேசிங் மற்றும் போடோக்ஸ் , அது போக ஆஸ்திரேலியாவில் ஒரு தனி நிலம் உட்பட பல அட்டகாசமான பரிசுகளை வழங்குகிறது.

ஆனால் இந்த பரிசு பை ஆஸ்கார் விருதுகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால், எந்தெந்த நாமினிகள் இந்த பரிசு பையைப் பெறுவார்கள் என்பதை அந்த நிறுவனம் தான் முடிவு செய்யும். மேலும் ஆஸ்கார் அதிகாரபூர்வமாக வழங்காத இந்த பரிசு தொகை மொத்தத்திற்கும் வரி செலுத்த வேண்டும். அதனால் பிரபலங்கள் தங்களுக்கு வேண்டிய பரிசை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

First published:

Tags: Oscar Awards