ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகளை பிரதமர் வழங்கி வருகிறார். தேசிய விருது என்கிறார்களே அப்படி என்ன தருவார்கள் என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான விடைகள் இதோ..
தேசிய திரைப்பட விருதுகள் என்பது 3 வகையாக பிரியும். ஸ்வர்ண கமலம், ரஜத் கமலம்,ஜூரி விருதுகள் என்று இருக்கும்.
ஸ்வர்ண கமலம்:
ஸ்வர்ண கமலம் என்பது தங்க மூலம் பூசிய பதக்கம். இத்தோடு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்படும்.
சிறந்த பீச்சர் படம், சிறந்த இயக்குனர் ஆகிய விருதை வென்றவர்களுக்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.2.5 லட்சமும் சான்றிதழும் வழங்கப்படும்.
சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
சிறந்த குழந்தைகளுக்கான படத்திற்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த புது இயக்குனர்,சிறந்த அனிமேட்டட் படங்களுக்கு ஸ்வர்ண கமலத்தோடு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
ரஜத் கமலம் :
ரஜத் கமலம் என்பது வெள்ளியால் ஆனா கமல பதக்கம். இத்தோடு 50,000 பரிசுத்த தொகையாக வழங்கப்படும்.
சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இசையமைப்பாளர, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த ரஜத் கமல பதக்கமும், காசோலையும், சான்றிதழும் வழங்கப்படும்.
சிறந்த விமர்சகர்:
சினிமா கலைக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியதற்காக நாடு முழுவதும் உள்ள சிறந்த விமர்சகரை நடுவர் மன்றம் கெளரவிக்க இந்த விருதை வழங்கும்.வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு ரூ.75000 கிடைக்கும்..
சிறப்பு நடுவர் விருது/குறிப்பிடுதல்
சினிமாவில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் சிறப்பு ஜூரி விருதும் உள்ளது. வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு - ரூ. 250000 வழங்கப்படும்.
சிறப்பு ஜூரி குறிப்பு பரிசு என்பது சிறந்த வேலையை முன்னெடுத்ததைக் குறிப்புட்டு அவர்களை ஊக்கப்படுத்த வழங்கப்படுவது. இந்த பிரிவின் கீழ் ரொக்கப் பரிசு ஏதும் இல்லை. பாராட்டுச் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.