பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு.. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன்.. வனிதா விஜயகுமார் கண்ணீர்

பீட்டர்பால் குடித்து குடித்து தன்னை மட்டுமல்லாமல், அவரை நம்பியுள்ள குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது போல் நடந்துகொள்வதாக வனிதா விஜயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் உடன் திருமணம் செய்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதே வேளையில் தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் வெடித்தன.

சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பீட்டர்பால் உடன் நடந்த பிரச்னை குறித்து வனிதா விஜயகுமார் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “பீட்டர் பால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு வந்ததால், நான் பேரதிர்ச்சி அடைந்தேன்.. அதிர்ஷ்டவசமாக காப்பாற்றினேன். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்துவிட்டோம். மீண்டும் சிறிது நாளில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.எனக்கு ஒரு துணை வேண்டும் என்று உங்களை திருமணம் செய்தேனே தவிர, உங்கள் இறப்பை காண அல்ல என்று அவரிடம் பேசினேன்.
அவரை ட்ராக் செய்ததில், அவரை கையும் களவுமாக பிடித்தேன். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகியிருந்ததால், அதை விட வற்புறுத்தினேன். அதன் பிறகுதான் கோவா சென்றோம். பீட்டரின் சகோதரருக்கு
உடல் நலம் பாதிக்கப்பட்ட செய்தி வந்ததால், அதை காரணம் காட்டி மது குடித்தார். இந்த பழக்கம் எத்தனை நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது என்று தெரியவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை வந்தது. ஏற்கெனவே பலவீனமாக உள்ள அவர் குடித்திருப்பது எனக்கு கவலை அளித்தது. சரி. எப்படியோ வீட்டுக்கு வந்துவிட்டோம். அன்றையிலிருந்து ஒருவாரம் தொடர்ந்து குடித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் கூட்டி வந்துவிட்டால்... குடிக்க ஓடிவிடுவார். இன்னமும் போன் ஸ்விட்ச் ஆப்லேயே வைத்துள்ளார். அவர் எங்கிருக்கார் என்று தெரியவில்லை.
போதை பழக்கம்தான் அவருக்கு அதிகம் உள்ளதால், எனக்கு கவலை அளிக்கிறது.

என் சொந்த பணத்தில்தான் என் குழந்தைகளையும், பீட்டர்பாலையும் காப்பாத்திட்டுருக்கேன். என் வாழ்நாளில் நான் ஏமாந்தது அன்பினால்தான்.

குடிப்போதையால பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன்.. காதல், திருமணம் எனக்கு அமையவில்லை. ”


கண்ணீர் மல்க வனிதா விஜயகுமார் பேசியுள்ள அந்த வீடியோ மேலே உள்ளது. மேலும், அதில், பீட்டர் பால் மனைவியிடமும் சில கேள்விகளை கேட்டுள்ளார்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading