ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாநாடு படத்தின் டப்பிங், ரீமேக் உரிமைகளை விற்பதில் என்ன சிக்கல்?

மாநாடு படத்தின் டப்பிங், ரீமேக் உரிமைகளை விற்பதில் என்ன சிக்கல்?

மாநாடு

மாநாடு

மாநாடு படத்தில் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் உள்பட பலர் கேட்கிறார்கள். ஆனால், அதை தர முடியாத சூழலில் சுரேஷ் காமாட்சி இருப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாநாடு படப்பிரச்சனைகள் மழை ஓய்ந்தும் தூவானம் விடாத குறையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக படத்தின் டப்பிங், ரீமேக் உரிமைகளை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநாடு படத்தை தமிழில் வெளியான அதேநாள் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டிருந்தால் அங்கேயும் வெற்றி பெற்றிருக்கும். கடைசி நேரத்தில் நடந்த குளறுபடியால் அது நடக்கவில்லை. படம் வெளியாகி வெற்றி பெற்றதும் டப்பிங்குக்கு பதில் படத்தின் ரீமேக் ரைட்ஸை விற்கலாம் என நினைக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. டப்பிங்கில் கிடைப்பதைவிட ரீமேக் ரைட்ஸை விற்பதில் கூடுதல் பணம் பார்க்கலாம். ரிஸ்க்கும் குறைவு.

அதேபோல் மாநாடு படத்தில் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் உள்பட பலர் கேட்கிறார்கள். ஆனால், அதை தர முடியாத சூழலில் சுரேஷ் காமாட்சி இருப்பதாக கூறப்படுகிறது. மாநாடு வெளிவருவதற்கு முன் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸை மணிஷ் என்பவருக்கு 4.5 கோடிகளுக்கு சுரேஷ் காமாட்சி விற்பனை செய்துள்ளார். அந்த ஒப்பந்த ஷரத்தில், மாநாடு படத்தை வேறு மொழிகளில் டப் செய்யவோ, ரீமேக் செய்யவோ மணிஷின் அனுமதி வேண்டும் என சேர்த்துள்ளனர். இப்போது அதுதான் பிரச்சனையாகியிருக்கிறது என்கிறார்கள். மணிஷை மாநாடு தயாரிப்பாளரால் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

What is the problem with selling the dubbing and remake rights of the Maanaadu film, maanaadu movie, simbu maanaadu, simbu str, maanaadu release, maanaadu movie, venkat prabhu, மாநாடு ரிலீஸ், மாநாடு திரைப்படம், வெங்கட் பிரபு, suresh kamatchi net worth, suresh kamatchi twitter, suresh kamatchi father, suresh kamatchi wife, suresh kamatchi family, suresh kamatchi office address, suresh kamatchi instagram, suresh kamatchi age, சுரேஷ் காமாட்சி தந்தை, சுரேஷ் காமாட்சி மனைவி, சுரேஷ் காமாட்சி குடும்பம், சுரேஷ் காமாட்சி அலுவலக முகவரி, சுரேஷ் காமாட்சி இன்ஸ்டாகிராம், சுரேஷ் காமாட்சி வயது

தமிழ் படங்களின் இந்தி உரிமை நல்ல விலைக்குப் போகிறது. இந்தி டப்பிங், டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளை மொத்தமாக கொடுத்துவிடுகிறார்கள். இந்த உரிமைகளில் கிடைக்கும் உடனடி பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் இதுபோன்ற சட்டச் சிக்கல்கள் நிறைந்த ஒப்பந்த ஷரத்தை அனுமதிக்கின்றனர். படம் ஓடாவிட்டால் பாதகமில்லை. ஓடினால், சம்பந்தப்பட்டவர்களும் தயாரிப்பாளரிடம் பங்கு கேட்க வந்துவிடுகிறார்கள்.

விரைவில் சுரேஷ் காமாட்சி இந்தப் பிரச்சனைகளில் இருந்து மீள்வார் என நம்புவோம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Simbu, Tamil Cinema