ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குனர் மணிரத்னம் பார்வையில் ‘பான் இந்தியா’ திரைப்படம்

இயக்குனர் மணிரத்னம் பார்வையில் ‘பான் இந்தியா’ திரைப்படம்

மணிரத்னம்

மணிரத்னம்

வங்காளத்தில் ஒரு கிராமத்தில் நடந்த கதையை சத்யஜித்ரே படமாக்கினார். அது உலகம் முழுவதும் ரீச் ஆகியுள்ளது. – மணிரத்னம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பான் இந்தியா திரைப்படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி இயக்குனர் மணிரத்னம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

ஒரு படத்தை உருவாக்கும்போது பான் இந்தியா என்று நாங்கள் நினைப்பது கிடையாது. அந்தப் படத்தை முடிந்த வரை நேர்மையாக செய்ய வேண்டும். எந்த ஒரு படம் ஆழமான கதையை கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு எல்லைகளைத் தாண்டி பேசப்படும்.

வங்காளத்தில் ஒரு கிராமத்தில் நடந்த கதையை சத்யஜித்ரே படமாக்கினார். அது உலகம் முழுவதும் ரீச் ஆகியுள்ளது. அதனால் கதைகள் மண்சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் அந்தப் படம் மாநிலங்களைத் தாண்டி கவனம் பெறும்.

‘நாவலை அப்படியே படமாக்கினால் அது டாக்குமெண்டரி போல் ஆகிவிடும்’ – பொன்னியின் செல்வன் சுவாரசியத்தை விளக்கும் மணிரத்னம்

கேரக்டர்கள் தேர்வு என்பது கதையை யோசிக்கும்போதே தோன்றி விடும். நடிகர்களை சரியாக தேர்வு செய்தாலே முக்கியமான வேலைகள் முடிந்து விடும்.

' isDesktop="true" id="811027" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

ஒரே மாதிரியான கேரக்டரை ஒரு நடிகர் பலமுறை செய்திருந்தால், அவரை நடிக்க வைக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அந்த கேரக்டருக்கு இன்னொருவரை நடிக்க வைக்கும்போது, அவரையும் தாண்டி அந்த கேரக்டர் வெளியே வரும். அதுதான் தேவை.

பொன்னியின் செல்வன் படத்தில் 2 முறைகளில் நடிகர்களை தேர்வு செய்தோம். அவர்களுக்கு தேதி இருக்க வேண்டும். இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.

பொன்னியின் செல்வன் படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்ன? மணிரத்னம் பிரத்யேக பேட்டி

பீரியட் படமாக இது எனக்கு முதல் படம். பெரும்பாலானோருக்கு இதுதான் முதல் பீரியட் படம் என்பதால் மிகவும் ஆர்வமாக இருந்தோம். அது நன்றாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan