• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓ மணப்பெண்ணே படம் வெற்றியால் தயாரிப்பாளர்கள் ஹேப்பி.. தமிழில் அடுத்த படத்துக்கு தயார்!

ஓ மணப்பெண்ணே படம் வெற்றியால் தயாரிப்பாளர்கள் ஹேப்பி.. தமிழில் அடுத்த படத்துக்கு தயார்!

 ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே படத்தை தயாரித்தவர்கள் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் கில்லாடி படத்தை தயாரித்து வருகின்றனர். அர்ஜுன் இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். விரைவில் தங்களின் அடுத்த தமிழ்த் தயாரிப்பு குறித்து அறிவிக்க உள்ளனர்.  

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பவை பலரது வாழ்க்கையுடன் தொடர்புடையது. தோல்விகளால் மோசர் பேர், யுடிவி போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழில் படம் தயாரிப்பதை நிறுத்தின. நடிகர்கள், தொழில்நட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என பலநூறு பேருக்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் வேலை கிடைத்து வந்தது. அவர்கள் வெளியேறியது இவர்கள் அனைவருக்குமே பாதிப்புதான். வெற்றிகள் கிடைத்திருக்கும் என்றால் தொடர்ந்து தமிழில் படம் தயாரித்திருப்பார்கள். வேலைகள் அனைவருக்கும் கிடைத்திருக்கும்.

சமீபத்தி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் மணப்பெண்ணே படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பெல்லி சூப்புல படத்தின் தமிழ் ரீமேக்கே மணப்பெண்ணே

படத்தை ஸ்டுடியோஸ் எல்எல்பி மற்றும் ஹாவிஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன. இவர்கள் தெலுங்கு படவுலகைச் சேர்ந்தவர்கள். மணப்பெண்ணே அவர்களின் முதல் தமிழ்ப் படம். அக்டோபர் 22 ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படம் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் உற்சாகமடைந்த தயாரிப்பாளர்கள், தொடர்ந்து தமிழில் படம் தயாரிக்கயிருப்பதாக அறிவித்துள்ளார்கள். ஒரு வெற்றி மேலும் பல படமுதலீடுகளை சம்பாதித்து தந்திருக்கிறது.

Also read... அரச பயங்கரவாதத்தின் பேரவலம் - ஜெய் பீமை பாராட்டிய திருமாவளவன்!

மணப்பெண்ணே படத்தை தயாரித்தவர்கள் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் கில்லாடி படத்தை தயாரித்து வருகின்றனர். அர்ஜுன் இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். விரைவில் தங்களின் அடுத்த தமிழ்த் தயாரிப்பு குறித்து அறிவிக்க உள்ளனர்.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: