OTT Platform: வீட்டிலிருந்தே வார இறுதியில் என்ன பார்க்கலாம்?

ஓடிடி படங்கள்

செழியன் இயக்கத்தில், சந்தோஷ் நடிப்பில் பல விருதுகளைப் பெற்ற திரைப்படம். திரையரங்கில் இதனைப் பார்க்க முடியாதவர்கள் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

  • Share this:
திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் மால்களை திறக்க அனுமதியில்லை. வார இறுதியில் குடும்பத்தினருடன் கண்டுகளிக்க என்னென்ன திரைப்படங்கள், வெப் தொடர்கள் பார்க்கலாம்?

நெட்பிளிக்ஸ்

1. ரே (இந்தி ஆந்தாலஜி)
சத்யஜித் ரே எழுதிய நான்கு சிறுகதைகளை தேர்வு செய்து ஆந்தாலஜியாக உருவாக்கியிருக்கிறார்கள். நான்கில் முதல் மூன்று கதைகள் சிறப்பானவை. கே கே மேனன் நடித்திருக்கும் இரண்டாவது கதையில் சில நொடிகள் வரும் பாலியல் காட்சி தவிர்த்துப் பார்த்தால், குடும்பத்துடன் செலவிட இதுவொரு ஏற்ற திரைப்படம்.

2. ஸ்வீட் டூத் (ஆங்கில வெப் தொடர்)
இதுவொரு அமெரிக்கன் ஃபேண்டஸி சீhpஸ். இந்த மாதம் 4 ஆம் தேதி வெளியானது, ஸ்வீட் டூத் காமிக்ஸ் புத்தகத்தை தழுவி இதனை எடுத்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு பாதி மனித உடம்பும், பாதி மிருக உடம்புமாக சில குழந்தைகள் பிறக்கின்றன. இந்த புதியவகை மனிதர்கள் மீது அச்சப்பட்டு அவர்களை கொலை செய்கிறார்கள். மனிதன் பாதி, மான் பாதியாக வாழும் சிறுவனை மையப்படுத்தி இந்த சீரிஸை எடுத்துள்ளனர். ஃபேண்டஸி விரும்பிகளுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

அமேசான் பிரைம்

1. ஷெர்னி (இந்தி திரைப்படம்)
வித்யாபாலன் நடித்திருக்கும் ஷெர்னி விறுவிறுப்பான படமல்ல. ஆனால், நமது நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்சனையைக் குறித்து அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம். வாழிடம் மறுக்கப்பட்ட ஒரு பெண் புலியை காட்டிலாகா அதிகாரிகள் உயிரோடு தப்பிவிக்க மேற்கொள்ளும் முயற்சியும், அதனை கொன்றுவிட துடிக்கும் இன்னொரு கூட்டத்தையும் மிகையில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் படைப்பு.

2. கோ கோ (மலையாள திரைப்படம்)
கர்ணனில் நடித்த ரஜிஷா விஜயன் நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் கோ கோ. இயக்கம் ராகுல் ரிஜி நாயர். கோ கோ விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு கோ கோ பயிற்சி அளிப்பவராக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

3. டூலெட் (தமிழ் திரைப்படம்)
செழியன் இயக்கத்தில், சந்தோஷ் நடிப்பில் பல விருதுகளைப் பெற்ற திரைப்படம். திரையரங்கில் இதனைப் பார்க்க முடியாதவர்கள் அமேசான் பிரைமில் பார்க்கலாம். இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்னி + ஹாட் ஸ்டார்

1. க்ரஹான் (இந்தி வெப் தொடர்)
1984 இந்திராகாந்தி படுகொலைக்குப் பின்னான சீக்கியர் படுகொலையை மையப்படுத்திய வெப் தொடர். இரு தினங்கள் முன்புதான் வெளியானது. அரசியல் தொடர்களை விரும்புகிறவர்களுக்கு நல்ல தேர்வு.

2. டெடி (தமிழ் திரைப்படம்)
டெடி சமீபத்தில் தொலைக்காட்சியில் வெளியானது. தவறவிட்டவர்கள் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். குழந்தைகளுடன் குடும்பமாகப் பார்க்க ஆர்யாவின் இந்தப் படம் சரியான தேர்வாக இருக்கும்.

பிஎஸ் வேல்யூ

1. மேதகு
பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் மேதகு திரைப்படம் நேற்று வெளியானது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் படம் இது. ஈழம் பற்றி படம் வருகிறது என்றால், அது வெளியாகும் முன்பே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பலரும், மேதகு படம் வெளிவருவதற்கு முன்பே ஆதரவு தெரிவித்தனர். படம் ஒழுங்கான வரலாறை சொல்லவில்லை என விசனப்பட்டிருக்கிறார் சீமான். மன வலிமையைப் பொறுத்து மேதகு படத்தை வார இறுதியில் முயற்சி செய்யலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: