• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன?

எஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன?

SBP treatment

SBP treatment

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணமடையும் வரை கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன?

  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடன் தனது உடல்நிலை குறித்து, அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

    அடுத்த ஒரு வார காலத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து, நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால், செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின.

    இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளிட்ட எஸ்.பி.பி.சரண், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் எஸ்.பி.பி. உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதனிடையே, செயற்கை சுவாசத்தில் இருந்த SPBக்கு அவர் பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள் மற்றும் மெல்லிசை பாடல்கள் என அவர் இருக்கும் அறையிலேயே ஒலிக்க வைக்கப்பட்டன. சாய்பாபாவின் தீவிர பக்தரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, அவர் பாடிய பாபா ஒர் சரணாலயம் பாடல் கேட்க வைக்கப்பட்டது.

    இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து எஸ்.பி.பி. மீண்டு விட்டதாக கூறிய அவரது மகன் சரண், தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வபோது தெரிவித்து வந்தார்.



    இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பிக்கு நீண்ட நாள் சிகிச்சை தேவைப்பட்டதால், கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தொண்டையில் துளையிட்டு செயற்கை சுவாசம் கொடுப்பதற்காக, டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டது.

    எக்மோ சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சைகள் கொடுக்கப்பட்டாலும், அதில் இருந்து எஸ்.பி.பி மீண்டு வருவதற்கான சிகிச்சைகளும் தொடர்ந்தன. இந்நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி எஸ்.பி.பி..சரண் வெளியிட்ட வீடியோவில், நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



    எஸ்.பி.பி.யின் நினைவாற்றல் நல்ல முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி பிற்பகலில் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்த கசிவால், அவர் சுய நினைவை இழந்ததாக தகவல் வெளியானது.

    மேலும் படிக்க...எஸ்பிபி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக அவர்களை வரவழைத்தது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: