ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்ன? மணிரத்னம் பிரத்யேக பேட்டி

பொன்னியின் செல்வன் படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்ன? மணிரத்னம் பிரத்யேக பேட்டி

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் ஜெயம் ரவியுடன் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் ஜெயம் ரவியுடன் மணிரத்னம்.

சோழர்கள் காலத்தில் ரோமானியர்கள் போன்று உலோகத்தாலான பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்படவில்லை. படத்தில் தோலாலான பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. – மணிரத்னம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார் மணிரத்னம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி இயக்குனர் மணிரத்னம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

எல்லா படத்திற்கும் நடிகர்களுடன் ஹோம்வொர்க் தேவைப்படும். ஆனால் இந்த படத்திற்கு 6 மாதத்திற்கு முன்பாகவே நடிகர்களுக்கான பயிற்சியை தொடங்கி விட்டோம்.

பொன்னியின் செல்வனை படிக்கும் போது தான் தெரிகிறது கல்கி எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டு இந்த நாவலை படைத்து இருக்கிறார் என்று. இந்த படத்திற்காக உடை, தோற்றம் உள்ளிட்ட பல அம்சங்களை நாங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டோம்.  இது தொடர்பாக வல்லுனர்கள் பலரிடம் கருத்துக்களை கேட்டோம்.

அன்றைய கால கட்டத்தில் போரில் தலைக்கவசம் அணிந்து இருந்தார்கள் நமக்கு கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்களில் பல தகவல்கள் உள்ளன. அதன் மூலமாக உடை, தோற்றம், கலாசாரம், வாழ்வியல் உள்ளிட்ட அம்சங்களை படத்தில் சேர்த்தோம்.

பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து ஏன் இடம்பெறவில்லை? மணிரத்னம் விளக்கம்

சோழர்கள் காலத்தில் ரோமானியர்கள் போன்று உலோகத்தாலான பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்படவில்லை. படத்தில் தோலாலான பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எங்களுக்கு உதவியாக  பலர் இருந்தார்கள்.

உதாரணத்திற்கு ஒரு மார்க்கெட் செட்டிங்கை ஏற்படுத்தும் போது அதில் சமீபத்தில் அல்லது பிரிட்டிஷார் கொண்டு வந்த பழங்கள் ஏதும் அந்த காட்சியில் இருக்க கூடாது. அந்த அளவுக்கு நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.

' isDesktop="true" id="811023" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதற்கு முன்பாக அது தொடர்பான அனைத்து இடங்களுக்கும் நாங்கள் சென்றோம். எல்லா கோவில்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்து ஆய்வு எடுத்துதான் படத்தை ஆரம்பித்தோம்.

பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு சவாலாக இருந்தது இந்த விஷயம்தான்… விவரிக்கும் மணிரத்னம்

10 ஆம் நூற்றாண்டில் இசை எப்படி இருந்தது? சிலப்பதிகாரத்தில் சில தகவல்கள் இருந்தன. சொல்லப்போனால், 10 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான இசைக்கு எங்குமே தகவல்கள் கிடையாது. 1940, 50 களில் வெளிவந்த சரித்திரப் படங்களில் என்ன இசை இருக்கிறதோ அதுதான் சோழர் கால இசை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல.

அந்த காலகட்டத்திற்கு ஏற்ற, சாயலான இசை இருக்க வேண்டும். அதைத் தாண்டி கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் இசை அமைய வேண்டும்.

அதற்காகத்தான் ரகுமான் பாலிக்கு சென்று சில தகவல்களைப் பெறலாம் என கூறினார். அங்கு சோழர்கள் சென்றதால் இசை குறித்த சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். Monkey Chants எனப்படும் இசையை பார்த்தோம். புல்லரிக்க செய்யும் வகையில் இருந்தது.

100-150 பேர் அமர்ந்து வாய் மூலமாக ஒலி எழுப்பி இசையை உருவாக்கினார்கள். அதிலிருந்து எங்களுக்கு இசைக்கான தொடக்கம் கிடைத்தது. அதிலிருந்து நாங்கள் பயணித்தோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan