ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாட்டு வரி காணோம்.. முக்கிய சீன் இல்லை.. ரீ ரிலீஸ் ஆன பாபா படத்தில் இவ்வளவு மாற்றங்களா?

பாட்டு வரி காணோம்.. முக்கிய சீன் இல்லை.. ரீ ரிலீஸ் ஆன பாபா படத்தில் இவ்வளவு மாற்றங்களா?

பாபா படத்தில் ரஜினி

பாபா படத்தில் ரஜினி

ரஜினிக்கு அளிக்கப்பட்ட 7 மந்திரங்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. ரம்யா கிருஷ்ணன் இடம்பெறும் படையப்பா காட்சி நீக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பாபா திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பதிப்பில் சில மாற்றங்களை படக்குழுவினர் செய்திருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் ஏற்கனவே வெளியான படத்தை விடவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாபா படத்தில் ரஜினியின் அறிமுக காட்சி நீக்கப்பட்டு, ‘பாபா வந்துட்டு இருக்கான்’ என்று அவரது அம்மாவாக நடித்திருக்கும் சுஜாதா கூறும் போது, அடுத்த காட்சி நேராக ‘டிப்பு டிப்பு’ காட்சி செல்கிறது. படத்தில் ரஜினி தனது நண்பர்களுடன் மது அருந்தும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ரியாஸ்கான் உடன் சண்டையிடும் காட்சி குறைக்கப்பட்டுள்ளது. மனிஷா கொய்ராலா உடன் ஆட்டோவில் வந்து இறங்கிய பின்னர் ஆட்டோகாரரிடம், இரு வந்துட்றேன் என்பார். அதற்கு ஆட்டோகாரர் ‘உன்ன விட்டுட்டு போவேனா தலைவா’ என்று பதிலளிப்பார் இந்தக் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.

பாபா கவுண்டன் ஸ்டார்ட்... ரீ ரிலீஸான முதல் நாள் வசூல் விவரம் இதோ..!

படத்தின் வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி ரஜினியை இப்பவே பார்க்க வேண்டும் என்று கூறி ஆளை அனுப்புவார். அதன் பின்னர் அவர் சவுகார்பேட்டையில் இருக்கிறாரா இல்லை சைதாப்பேட்டையில் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு ரஜினி அவரை பார்க்க செல்வார். இந்த காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.

முந்தைய பாபா படத்தில், ஜப்பான் பெண்ணுக்காக தனது மந்திரத்தை பயன்படுத்துவார். இந்த ஒட்டுமொத்த காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி 2 படத்தில் இணைந்த கங்கனா ரனாவத்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மனிஷா கொய்ராலா வீட்டிற்குள் வந்து நீ யாரு என்று கேட்டு உறவுகளை ரஜினி வெளியே விரட்டி அடிப்பார். கடைசியில் நண்பரை மட்டும் வீட்டிற்கு இருக்க சொல்வார். நல்ல வரவேற்பு பெற்ற இந்த காட்சியையும் தூக்கி விட்டார்கள்.

ரஜினிக்கு அளிக்கப்பட்ட 7 மந்திரங்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. ரம்யா கிருஷ்ணன் இடம்பெறும் படையப்பா காட்சி நீக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி திரையரங்கில் மாஸாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதேபோன்று டெல்லிகணேஷ் இடம்பெறும் நாதஸ்வரம் வாசிப்பது தொடர்பான காட்சி நீக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கிளைமாக்ஸ் காட்சியையும் படத்தில் மாற்றி அமைத்து உள்ளார்கள். இருப்பினும் இந்த மாற்றங்கள் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

First published:

Tags: Rajinikanth