‘என்ன ஒரு அற்புதமான நடிகர் ...’ விஷ்ணு விஷாலை ஆச்சரியப்படுத்திய பிரபலம்

‘என்ன ஒரு அற்புதமான நடிகர் ...’ விஷ்ணு விஷாலை ஆச்சரியப்படுத்திய பிரபலம்

இந்திரஜித் - விஷ்ணு விஷால்

பாராட்டுதலும், பழிவாங்கலும் எப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதோ, அதேபோல் எத்தனை போட்டி, பொறாமைகள் இருந்தாலும், வெளிப்படையாக பாராட்டுவதில் சினிமாக்காரர்களுக்கு இணையில்லை.

 • Share this:
  பாராட்டுதலும், பழிவாங்கலும் எப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதோ, அதேபோல் எத்தனை போட்டி, பொறாமைகள் இருந்தாலும், வெளிப்படையாக பாராட்டுவதில் சினிமாக்காரர்களுக்கு இணையில்லை. இந்தமுறை அந்த தாராளத்தை காட்டியிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.

  விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் மோகன்தாஸ். முரளி கார்த்திக் எழுதி இயக்கும் இந்தப் படத்தில், பிருத்விராஜின் அண்ணனும், நடிகருமான இந்திரஜித் நடித்துள்ளார். இந்திரஜித் மலையாளத்தின் முன்னணி நடிகர். தமிழில் என்மன வானில், சர்வம், குயின் படங்களில் நடித்துள்ளார்.  கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள நரகாசூரன் இன்னும் வெளியாகாமல் உள்ளது. மோகன்தாஸில் இந்திரஜித்துக்கு முக்கியமான வேடம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக முடித்து, கேக் வெட்டி அவரை வழி அனுப்பி வைத்தனர். சிறப்பானமுறையில் கவனித்துக் கொண்டதற்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட இந்திரஜித், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருடன் நடித்ததற்கு தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

  அவருக்கு பதிலளிக்கும்விதமாக ட்வீட் செய்துள்ள விஷ்ணு விஷால், "என்னவொரு அற்புதமான நடிகர் மற்றும் சிறந்த மனிதர். உடன் நடித்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். இந்திரஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டாலும், படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளது. விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: