நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து பாராட்டியுள்ளார்.
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனைத்து முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளதால் மெல்ல மெல்ல ரசிகர்களிடையே காந்தாரா படம் ரீச்சாகி வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்தும், படத்தை பாராட்டியும் எழுதி வருகின்றனர்.
Also read... இருவர் முதல் எந்திரன் வரை ஐஸ்வர்யா ராயின் ஹிட் பாடல்கள் ஒரு லிஸ்ட்!
ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் குழுவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.
With a team of volunteers and well-wishers watched #KantaraMovie in Bengaluru.
Well made @shetty_rishab (writer/director/actor).👏
The film captures the rich traditions of Tuluvanadu and Karavali.
@rajeshpadmar @SamirKagalkar @surnell @MODIfiedVikas @KiranKS @Shruthi_Thumbri pic.twitter.com/vVbbk5fNno
— Nirmala Sitharaman (@nsitharaman) November 2, 2022
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், கந்தாரா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. துளுவநாடு மற்றும் கரவாளியின் வளமான பாரம்பரியத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி படத்தை நன்றாக இயக்கி, நடித்துள்ளார் அதற்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.