Tamil Cinema: இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் - ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.

  • Share this:
    இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம் என தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

    கொரோனா 2-ம் அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் செயல்படும் எனவும், தேநீர் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி, “சென்ற வாரம் முதல்வரை சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.

    சினிமா தொழிலாளர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: