வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழன் இந்து அரசன் எனதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நேற்று விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது-
தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் என்று கருதுகிறேன். இதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்து கலை ரீதியாக எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு தமிழ்நாடு இருக்கிறது. இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன்.
திராவிட இயக்கங்களை பாராட்டிப் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்… அரசியல் பேச்சால் பரபரப்பு
சினிமா என்பது வெகு மக்களை எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப ரொம்ப முக்கியம்.
மக்களிடம் இருந்து விலகிஎந்தக் கலையும் முழுமை அடையாது. ஏனென்றால் மக்களுக்காகத்தான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். இன்றைக்கு நாம் கையாளத் தவறினால் ரொம்ப சீக்கிரத்தில் நிறைய அடையாளங்களை இழக்க நேரிடும்.
தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.
சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்.
இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director vetrimaran