முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் இனிய தமிழ் மக்களே... ரகசியத்தை சொன்ன பாரதிராஜா..!

என் இனிய தமிழ் மக்களே... ரகசியத்தை சொன்ன பாரதிராஜா..!

பாரதிராஜா

பாரதிராஜா

கையை தலைமீது உயர்த்தி கும்பிடுவது தான் எனக்கு அடையாளம். இதற்கும் காரணம் உண்டு என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டம் அருகே நட்டலாம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ் தாய் வாழ்த்து பாடுவதில் எனக்கு சின்ன ஒரு வருத்தம் உள்ளது.

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்கிற போது ஏற்கனவே எத்திசையும் புகழ் மணக்க இருந்த தமிழ் இப்போ இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, எத்திசையும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், நான் கையை தலைமீது உயர்த்தி கும்பிடுவது தான் எனக்கு அடையாளம். இதற்கும் காரணம் உண்டு. தமிழக கோவில் கோபுரங்கள் அப்படி தான் இருக்கும். நீங்கள் என் கோவில் போன்றவர்கள். எனவே தான் ‘என் இனிய தமிழ் மக்களே’ என அப்படி வணங்குகிறேன் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Bharathiraja, Director bharathiraja, Tamil Culture