ராகுல் காந்திக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு கேரள மாநிலத்தில் அதிக அளவில் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்திக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம்
  • News18
  • Last Updated: April 20, 2019, 3:20 PM IST
  • Share this:
ராகுல் காந்திக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் கேரளாவில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த முறை வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதனால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.


இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வயநாட்டில் முகாமிட்டுள்ளார். அவர் அங்கு போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக வயநாடு நிலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் விஜய் மக்கள் இயக்கத்தினரை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இன்று சந்தித்து பேசினார். அப்போது வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்திக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கத்தினர் செயல்பட வேண்டும் என ஆதரவு கோரினார்.

இதை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்று ஆதரவளித்தனர். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் இறங்கி ராகுலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், விஜய் மக்கள் இயக்கத்தினரோடு இணைந்து நிலம்பூர் பகுதியில் வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். நடிகர் விஜய்க்கு கேரள மாநிலத்தில் அதிக அளவில் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு கேரள விஜய் ரசிகர்கள் ஆதரவு!

First published: April 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading