முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH – கே.ஜி.எஃப் ஸ்டைலில் உருவான ‘கப்ஜா’ படத்தின் அதிரடி ட்ரெய்லர்

WATCH – கே.ஜி.எஃப் ஸ்டைலில் உருவான ‘கப்ஜா’ படத்தின் அதிரடி ட்ரெய்லர்

கப்ஜா படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

கப்ஜா படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

கே .ஜி.எஃப். படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கப்ஜா திரைப்படம் மார்ச் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

கன்னட சினிமாவில் இருந்து கே.ஜி.எஃப். படங்களுக்கு அடுத்தபடியாக, கப்ஜா என்ற திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் அதிரடியான ட்ரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்துக்கு பிறகு கன்னட படங்களுக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, காந்தாரா படமும் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்தநிலையில், கன்னடத்தில் உருவாகியுள்ள கப்ஜா படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கப்ஜா படத்தில் உபேந்திரா, சுதீப், சிவராஜ் குமார் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை ஸ்ரேயாவுக்கு முக்கிய கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. முரளி சர்மா, கபிர் டுகான் சிங், நவாப் ஷா, கோட்டா சீனிவாச ராவ், தேவ் கில், காமராஜன், டேனிஷ் அக்தர் உள்பட டஜன் கணக்கில் வில்லன்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ட்ரெய்லரைப் பார்க்க..

' isDesktop="true" id="904100" youtubeid="eoTSCitmcBA" category="cinema">

கே.ஜி.எஃப். படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் மேக்கிங் கே.ஜி.எஃப் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆர். சந்த்ரு இயக்கியிருக்கும் இந்த படத்தை அவருடன் இணைந்து அலங்கார் பாண்டியன் தயாரித்துள்ளார். இந்தப் படம் இம்மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

First published:

Tags: Kollywood