ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால்

பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால்

பதான் - கிரிஷ் கெளதம் (பாஜக)

பதான் - கிரிஷ் கெளதம் (பாஜக)

தீபிகா படுகோனே ஜேஎன்யூவில் 'துக்டே துக்டே கேங்'க்கு ஆதரவாக நின்றார். அப்போது அவரது மனநிலை அம்பலமானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டமன்ற சபாநாயகர் கிரீஷ் கவுதமும் நடிகர் ஷாருக்கானின் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”ஷாருக் தனது மகளுடன் இந்தப் படத்தைப் பார்த்து, அந்தப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றி, தனது மகளுடன் படம் பார்ப்பதாக உலகுக்குச் சொல்ல வேண்டும். நபிகள் நாயகத்தை மையப்படுத்தி இதே போன்ற படத்தைத் தயாரித்து இயக்குங்கள் என்று சவால் விடுகிறேன்” என்றார் அவர்.

திரையரங்குகளில் "பதான்" திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், இன்று தொடங்கவுள்ள ஐந்து நாள் குளிர்காலக் கூட்டத்திற்கு முன்னதாக திரு.கௌதம் இவ்வாறு கூறினார். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் ஆளும் பாஜக சார்பில் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் கோவிந்த் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இந்தப் படம் "எங்கள் மதிப்புகளுக்கு எதிரானது" என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

"இது பதானைப் பற்றியது அல்ல, ஆனால் ஆடைகளைப் பற்றியது" என்று சுரேஷ் பச்சூரி கூறினார். இந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு பெண்ணும் அத்தகைய ஆடைகளை அணிந்து, அந்தக் காட்சியில் நடிப்பதை, இந்துக்கள், முஸ்லிம்கள் அல்லது மற்ற மதங்களை பின்பற்றும் எந்த மதத்தினரும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை, நரோட்டம் மிஸ்ரா பதான் படத்தில் வரும் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். "பாடலில் உள்ள ஆடைகள் ஆட்சேபனைக்குரியவை. அது ஒரு அழுக்கான மனநிலையை பிரதிபலிக்கிறது," என்றும் அவர் கூறினார். 'பதான்' படத்தின் தயாரிப்பாளர்கள் 'பேஷாரம் ரங்' பாடலை வெளியிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நரோட்டம் மிஸ்ராவின் அறிக்கை வெளி வந்தது. இதில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே கதாநாயகன் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு

"பாடலின் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை சரிசெய்யுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். முன்னதாக, தீபிகா படுகோனே ஜேஎன்யூவில் 'துக்டே துக்டே கேங்'க்கு ஆதரவாக நின்றார். அப்போது அவரது மனநிலை அம்பலமானது. 'பேஷாரம் ரங்' ஆட்சேபனைக்குரியது என்று நான் நம்புகிறேன். மேலும், காவி மற்றும் பச்சை நிறங்கள் ஆடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆட்சேபனைக்குரியது. அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், தவறினால் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட வேண்டுமா என்று யோசிக்க வேண்டியிருக்கும்" என்று மிஸ்ரா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Deepika padukone, Shah rukh khan