ஐபிஎல் முதல் போட்டி போர் - வருத்தத்தில் பதிவிட்ட பிரபல நடிகர்!

ஐபிஎல் என்றாலே சிக்ஸர் மழை தான் என்ற போது நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர்கள் மட்டுமே இருந்தது.

ஐபிஎல் முதல் போட்டி போர் - வருத்தத்தில் பதிவிட்ட பிரபல நடிகர்!
ஐபிஎல் என்றாலே சிக்ஸர் மழை தான் என்ற போது நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர்கள் மட்டுமே இருந்தது.
  • News18
  • Last Updated: March 24, 2019, 8:54 AM IST
  • Share this:
2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிறப்பாக இல்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

12-ஐபிஎல் சீசன் தொடர் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி மோதியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. சொந்த மண்ணில் பேராதரவுடன் களமிறங்கியது சென்னை அணி.

சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பெங்களூரு அணி இழந்தது. இதையடுத்து விளையாடிய சென்னை அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.


ஐபிஎல் என்றாலே சிக்ஸர் மழை தான் என்ற போது நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர்கள் மட்டுமே இருந்தது. பெங்களூரு அணி சார்பில் மொயின் அலி ஒரு சிக்ஸரும், சென்னை அணி சார்பில் அம்பதி ராயுடு ஒரு சிக்ஸரும் அடித்தனர். சிறப்பான ஆட்டத்தை காண வந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. பெங்களூரு அணி அதிக ரன்களை எடுக்காததால், இலக்கை எளிதாக எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது.சென்னை அணியின் வெற்றி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ‘ஐபிஎல்-க்கான சிறப்பான தொடக்கம் இல்லை. ஆனால் சென்னை அணிக்கு சிறப்பான ஆட்டம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை சேப்பாக் மைதானத்தில் பார்க்க முடியும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.ALSO WATCH

First published: March 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்