லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள வாரியர் திரைப்படத்தின் வெளியிட்டுக்கான முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, இயக்குனர்கள் பாரதிராஜா மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட 20 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதில் அனைவரும் லிங்குசாமியையும் வாரியர் திரைப்படத்தையும் பாராட்டி பேசினர்.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள வாரியர் விழாவில் பேசிய விஷால், தற்போது தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் வெளியாகின்றன. தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கின்றன. இதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சும்மா தென்னிந்திய சினிமா தென்னிந்திய சினிமா என்று சொல்வார்கள். இன்று தென்னிந்திய சினிமாதான் ரூல் செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார். அத்துடன் பாலிவுட் தற்போது கதிகலங்கி உள்ளது எனவும் கூறினார். தெலுங்கு ரசிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் நடிகர்களை வரவேற்றுள்ளனர். அதுபோல ராம் போத்தினேனியை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என விஷால் கூறினார்.
இளையராஜா தமிழ்நாட்டிற்கு கிடைத்த சொத்து.. இயக்குநர் பாரதிராஜா பெருமிதம்!
லிங்குசாமியை கடந்த 25 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நாங்கள் ஒன்றாக சீட் விளையாடியுள்ளோம், காசு இல்லாமல் கஷ்டப்பட்டு உள்ளோம். அவர் பதுங்குகிறார் என்றால் பாய போகிறார் என்று அர்த்தம். அடிபட்டு தற்போது திரும்புகிறார், நிச்சயம் பாய்வார் என்ற எனக்குத் தெரியும். கீழ் இருப்பவர்களை நாம் பார்த்துக் கொண்டால் நம்மை மேல் இருப்பவர் பார்த்துக் கொள்வார் என்று கூறுவார்கள். அந்த வகையில் உடன் பழகுபவர்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர் லிங்குசாமி. நிச்சயம் அவருக்கு இந்த திரைப்படம் வெற்றியாக அமையும். சாமிக்கு சரிவு உண்டு ஆனால் முடிவு இல்லை என லிங்குசாமியை புகழ்ந்தார் .
விஷால் போலவே இயக்குனர் எஸ்.ஜே சூர்யா பேசுவையில், தமிழ் - தெலுங்கு - இந்தி என்ற கதவுகள் தற்போது உடைந்துவிட்டன. சினிமாவின் பொற்காலத்தில் தற்போது நாம் உள்ளோம் என பெருமிதம் கொண்டார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கியுள்ள வாரியர் திரைப்படம் நிச்சயம் எல்லா இடங்களிலும் வெற்றி அடையும் என கூறினார்.
நடிகை மீனாவை பார்க்க வந்த நடிகை ரம்பா.. சென்னையில் தங்கி என்ன செய்கிறார் தெரியுமா?
வாரியர் படத்தின் நாயகன் ராம் கடந்த 15 ஆண்டுகளாக தமிழில் நடிக்க காத்துக் கொண்டிருந்ததாகவும், அது வாரியர் படம் மூலம் நிறைவேறி இருப்பதாகவும் கூறினார். சென்னையில் புல்லட் பாடலை வெளியிட்டோம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது பெட்ரோல் தீர தீர அதை ரசிகர்கள் நிரப்பிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கு ரசிகர்களுக்கு நன்றி என மகிழ்ச்சியுடன் கூறினார்.
அதேபோல் தங்களுடைய படத்தின் பாடல்களை வெளியிட்ட சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் நன்றி கூற கடமைப்பட்டு இருப்பதாகவும் ராம் பொத்தினேனி தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட அனைவரும் படம் நிச்சயம் வெற்றியடையும். லிங்குசாமி சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார் என தெரிவித்தனர். குறிப்பாக மணிரத்தினம் பேசுகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பும் வாரியர் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது இன்று லிங்குசாமி வெளியீட்டிற்கு வந்து விட்டார் நாங்கள் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அவர்கள் முன் செல்கையில் நாங்கள் பின்னாடியே வருகிறோம் என தெரிவித்தார்.
அதேபோல் பஞ்சாபில் நடைபெற்ற வந்த தன்னுடைய படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்தார் இயக்குநர் ஷங்கர். அவர் பேசுகையில், ஒரு பாடலை ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தால். அந்த பாடல் பெரும் வெற்றி என்று அர்த்தம். அந்த வகையில் தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வாரியர் படத்திற்கு உருவாகியுள்ள புல்லட் பாடலை அனைவரும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார். அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் பற்றி பேசுகையில், புஷ்பா படத்தின் பாடல்கள் தன்னுடைய ரிப்பீட் மோட் லிஸ்டில் இருப்பதாகவும் ஷங்கர் கூறினார்.
இந்தப் படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி கீர்த்தி சுரேஷ் போல் புகழடைய வேண்டும் என வாழ்த்தினார். லிங்குசாமி பற்றி பேசுகையில் வாரியர் திரைப்படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது, ஆனந்தம் படத்தின் பாண்டிங்! ரன் படத்தின் ஸ்டைல்!! சண்டக்கோழி படத்தின் பிக்சன்!!! உள்ளிட்டவை தோன்றுகின்றது என பாராட்டினார்.
இவர்களைப் போல பாரதிராஜா பேசுவையில், சினிமா என்பது அழகியல் சார்ந்தது. இந்தப் படத்தில் லிங்குசாமி மிரட்டி விட்டார். புல்லட் பாடலுக்கு இருவரும் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர். அதை பார்க்கையில் நமக்கு ஆட வேண்டும் என தோன்றுகிறது. இந்த படத்தின் இயக்குநர் லிங்குசாமி என்னுடைய Loveable Boy. மிக அன்பாக பழகக் கூடியவன். அவன் பெண்ணாக இருந்தால் அவனை என்னுடன் வைத்துக் கொண்டிருந்திருப்பேன் என நகைச்சுவையாக பேசினார். அவ்வளவு அருமையானவர் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இந்த திரைப்படத்திற்காக உண்மையாக உழைத்து உள்ளோம் எனவும் கூறினார். அத்துடன் நான் சம்பாதித்த கோடிகள் என்பது இந்த மேடையில் இருக்கும் மனிதர்கள்தான். பாரதிராஜா வாசலில் வாய்ப்பு கேட்டு நின்று இருக்கிறேன். ஆனால் இன்று அவர் எனக்காக வந்து நிற்கிறார். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம், கார் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள் என பெருமிதம் கொண்டார்.
இந்த விழாவில் வாரியர் பட குழுவை சேர்ந்த நடிகர் ஆதி, நடிகைகள் கிருத்தி ஷெட்டி, நதியா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள வாரியர் படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor vishal, Director lingusamy, Kollywood, Tamil Cinema